என் மலர்
நீங்கள் தேடியது "poovai jagan moorthy"
- முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- திருமணம் செய்த இருவரின் வீட்டாரும் சமரசம் செய்துள்ள நிலையில் இணக்கமான சூழல்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் காரணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, காதல் திருமணம் விவகாரத்தில், கட்டப்பஞ்சாயத்து செய்து சிறுவனைக் கடத்திய விவகாரத்தில், ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமினை உறுதி செய்து, அவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது .
திருமணம் செய்த இருவரின் வீட்டாரும் சமரசம் செய்துள்ள நிலையில், பிரச்னைகள் மறைந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படுகிறது என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
- பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 27-ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.
- முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
- பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.
நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.
எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது எனக் கூறி முன்ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துள்ளதால் ஜெகன்மூர்த்தி கைதாக வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை.
- ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அந்த முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
போலீசார் முன்பு ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை. முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார், பூவை ஜெகன்மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை, அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்போது ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் உறுதி அளித்தார்.
நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் தராமல் இருந்திருக்கலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான். வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து ஜெகன்மூர்த்தியை விசாரிக்க வேண்டி உள்ளது. ஜெகன்மூர்த்திக்கும் சஸ்பெண்ட் ஏடிஜிபி ஜெயராமுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தேவை. எனவே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார்.
- ஐகோர்ட்டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் கார ணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6-ந்தேதி இரவு சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்த ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு சென்றபோது ஆதரவாளர்கள் திரண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது காதல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி கட்டப் பஞ்சாயத்து செய்தது தொடர்பாகவும், போலீசார் விசாரணைக்கு சென்றபோது ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியது குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீஸ் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விசாரணைக்கு செல்லும்போது கூட்டமாக ஆட்களை திரட்டிக்கொண்டு செல்லக்கூடாது என்றும் தனியாகவே செல்ல வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
இதனை ஏற்று பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. இன்று காலை 10 மணி அளவில் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆதரவாளர்கள் யாருமின்றி தனி ஆளாகவே பூவை ஜெகன்மூர்த்தி இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். காதல் விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் உங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த மாதிர யான உதவிகளை கேட்டார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பெண் போலீஸ் மகேஸ்வரி நேரில் சென்று பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசி உள்ளார். பூந்தமல்லி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தான் களாம்பாக்கம் கிராமத்துக்கு சென்று காதல் ஜோடியை வீடு புகுந்து தூக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படியே கடந்த 6-ந்தேதி ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால் காதல் ஜோடி அங்கு இல்லாததால் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்தி உள்ளனர்.
அதுவே இப்போது பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்படி காதல் விவகாரத்தில் அரங்கேற்றப்பட்ட கடத்தல் பின்னணி பற்றிய முழுமையான தகவல்களையும் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் இருவரும் போனில் பேசிய உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் விவரங்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடத்தப்படும் விசாரணை என்பதால் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையிலான போலீசார் கேள்விகளை கேட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் முடிவிலேயே அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் டில் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், ஜெகன்மூர்த்தியிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் சிறுவன் கடத்தல் வழக்கில் அவரது பங்கு என்ன? எப்படி திட்டம் தீட்டப்பட்டுள்ளது? என்பது போன்ற தகவல்களை போலீசார் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதனை மையமாக வைத்தே முன்ஜாமின் மனு மீது ஐகோர்ட்டு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தப்பட்டுவருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
- ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சென்னை:
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் சமூக வலைத்தளம் மூலம் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து தனுசின் 16 வயது தம்பியை மர்ம கும்பல் காரில் கடத்தியது. பின்னர் மீண்டும் வீட்டில் விட்டு சென்றனர். இந்த கடத்தலில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீசார் விசாரணைக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
மேலும் ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- காவலர்களை அனுப்பி மிரட்டும் செயலில் திமுக அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
- எதிர்க்கட்சிகள் என்றால் மிரட்ட முனைவது சரியல்ல.
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டுவதா? சட்டம் - ஒழுங்கை காப்பதை விடுத்து அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியை கைது செய்வதாகக் கூறி பூந்தமல்லி அருகில் உள்ள அவரது வீட்டிற்கு 500-க்கும் கூடுதலான காவலர்களை அனுப்பி மிரட்டும் செயலில் திமுக அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லை. இத்தகைய சூழலில் அவரை கைது செய்ய முயல்வதும், அதற்காக 500க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பியிருப்பதும் அப்பட்டமான அச்சுறுத்தல் தான்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் சட்டம் - ஒழுங்கு அத்துமீறல்கள் தடுக்கப்படவில்லை. பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடரும் படி உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் என்றால் மிரட்ட முனைவது சரியல்ல. இந்தப் போக்கை கைவிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிப்பவர் ஜெகன்மூர்த்தி
- அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை.
கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர். இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆள் கடத்தல் வழக்கில் கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியை கைது செய்ய பூந்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெகன் மூர்த்தியை போலீசார் கைது செய்ய முயற்சித்தற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், KV குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஜெகன்மூர்த்தி அவர்களை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம்.
அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட Battalion-ஐ ஏன் அனுப்ப வேண்டும் ?
பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் திரு. ஜெகன்மூர்த்தி அவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அஇஅதிமுக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.
இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அஇஅதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுக-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!
ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை திரு. மு.க.ஸ்டாலின் உணரவேண்டும்.
இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்!
- காதல் திருமண விவகாரத்தில் பெண்ணின் தந்தை புகார்.
- கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாக்குமூலம் அடிப்படையில் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது எனத் தகவல்.
கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர். இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
தேனியைச் சேர்ந்த பெண் திருவாலங்காட்டைச் சேர்ந்த இனைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை கடத்தியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்கறிஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அந்த வழக்கறிஞர், ஜெகன் மூர்த்தி கூறியதன் பேரின் அந்த பெண்ணை கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
"திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.
இன்னமும் அதிமுக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனாலும் திருவள்ளூர் எங்களது சொந்த தொகுதி என்பதால் அதை நிச்சயம் கேட்டு வெற்றி பெறுவோம் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக மீறி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரு மதத்தை மட்டுமே வைத்து அவர் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார். ஹிந்து மத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. நான் கூட ஹிந்து தான் ஆனால் பாஜகவின் மத அரசியலை நான் ஆதரிக்கவில்லை என்று பூவை ஜெகன் மூர்த்தி பேசியுள்ளார்.
மேலும் "திமுக வெல்லக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக உள்ளது. பாஜக ஜெயிக்காது என பிரதமர் மோடிக்கே தெரியும். அதனால்தான், அதிமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை என அக்கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ளார் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை.
- 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்
"திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் அவர் கேட்டிருந்தார்.
ஆனால் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. இதனையடுத்து அதிமுக - புரட்சி பாரதம் கூட்டணி முறியும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டது என்றார்.
40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்.






