என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai train blasts"
- இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர்.
- இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.
ஜூலை 11, 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.
இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கடந்த ஜூலை மாதம் அந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு தரப்பு இந்த வழக்கை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பங்களுக்கும் 2015 தீர்ப்பில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட 13வது சந்தேக நபரான அப்துல் வாஹித்துக்கும் நிவாரணமாக அமைந்தது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் 2006 முதல் போலீஸ் காவலில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும், சமூகத்தில் தன் பெயர் மீதாக தவறாக கற்பிக்கப்பட்ட களங்கத்துக்கும் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மனித உரிமை ஆணையத்தில் அவர் மனு செய்துள்ளார். மேலும் தனது மறுவாழ்வுக்கும் வழிவகை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2006 இல் மும்பை பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்ட அப்துல் 9 வருடங்கள் சிறையில் இருந்தார். கடந்த 2015 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த 9 வருட சிறைவாசம், தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையை பாதித்ததாகவும், போலீஸ் கஸ்டடியில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகளால் தனக்கு கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
- 2006-ல் மின்சார ரெயில்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.
- குற்றவாளிகள் 12 பேரையும் சிறப்பு கோர்ட் சமீபத்தில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மும்பை ரெயில் தொடர் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் என மொத்தம் 12 பேரையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
இதனையடுத்து, மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அதே சமயம், இந்த தடை உத்தரவு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலையாவதைப் பாதிக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
- 2006-ல் மின்சார ரெயில்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.
- குற்றவாளிகள் 12 பேரையும் சிறப்பு கோர்ட் சமீபத்தில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மும்பை:
மும்பை ரெயில் தொடர் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் என அனைவரையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:
12 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும் முன் தீர்ப்பை மாநில அரசு ஆய்வு செய்யும்.
அதற்கு முன் தீர்ப்பின் தன்மை, விடுதலைக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசிப்போம்.
முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்வார். ஆய்வுக்கு பிறகுதான் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும். மாநில அரசிடம் கூடுதல் தகவல்கள் இருந்தால் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதை விரிவாகக் கூறுவார் என தெரிவித்தார்.
இந்நிலையில், மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு வரும் 24-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
- பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மும்பை:
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பை புறநகர் மேற்கு வழித்தடத்தில் பல ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்ததில் 189 பேர் பலியானார்கள். 800 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இதில் 5 பேருக்கு மரண தண்டனை யும் , 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி மகாராஷ்டிர அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் அப்பீல் செய்து இருந்தனர். குண்டு வெடிப்பு வழக்கு தொடர் பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை நாள்தோறும் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் அனில் கிலோர், ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தீர்ப்பு அளித்தது. 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
அரசு தரப்பு கோர்ட்டில் அளித்து இருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் மும்பை ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவித்து உள்ளது.






