என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை குண்டுவெடிப்பு"

    • இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர்.
    • இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    ஜூலை 11, 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    கடந்த ஜூலை மாதம் அந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு தரப்பு இந்த வழக்கை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பங்களுக்கும் 2015 தீர்ப்பில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட 13வது சந்தேக நபரான அப்துல் வாஹித்துக்கும் நிவாரணமாக அமைந்தது.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் 2006 முதல் போலீஸ் காவலில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும், சமூகத்தில் தன் பெயர் மீதாக தவறாக கற்பிக்கப்பட்ட களங்கத்துக்கும் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மனித உரிமை ஆணையத்தில் அவர் மனு செய்துள்ளார். மேலும் தனது மறுவாழ்வுக்கும் வழிவகை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    2006 இல் மும்பை பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்ட அப்துல் 9 வருடங்கள் சிறையில் இருந்தார். கடந்த 2015 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த 9 வருட சிறைவாசம், தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையை பாதித்ததாகவும், போலீஸ் கஸ்டடியில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகளால் தனக்கு கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீம் பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் பரோலில் விட முடியாது என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #BombayHighCourt #AbuSalem
    மும்பை:

    மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் அபு சலீம் (வயது 46). இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் கவுசர் பகர் என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். எனவே இதற்காக தனக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

    எனவே இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் அவர் முறையிட்டார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி வி.கே.தகில்ரமணி, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அபு சலீமை பரோலில் விட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரது பரோல் மனுவை தள்ளுபடி செய்தனர்.  #BombayHighCourt #AbuSalem  #tamilnews
    தன்னை பற்றிய தவறான தகவலை சஞ்ஜு திரைப்படத்தில் பதிவு செயததற்காக படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாதா அபு சலீம் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளான். #Sanjumovie #1993mumbaiblast
    மும்பை :

    நாட்டையே உலுக்கிய 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். மேலும், 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் நாட்டில் பதுங்கியிருப்பதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    மும்பை குண்டுவெடிப்புக்கு, வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களை  வழங்கியதாக தாதா அபு சலீம் என்பவனுக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவன் தாவூத் இப்ராகிம் சகோதரர் அனிஸ் இப்ராகிமின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே வழக்கில், பிரபல இந்தி திரைப்பட்ட நடிகர் சஞ்சய் தத் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தாக கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நல்லொழுக்கம் காரணமாக தண்டனை காலம் முடிவடையும் முன்னரே அவர் சிறையில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.



    சமீபத்தில், பாலிவுட் இயக்குனர் ராஜேஷ் ஹிரானி இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் ’சஞ்ஜு’ என் பெயரிடப்பட்ட சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் ரூ.300 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்த கொந்தளிப்பான நாட்களில்  சஞ்சய் தத்(ரன்பீர் கபூர்), அபு சலீமிடம் இருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கியை நேரில் வாங்குவது போல் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.  

    இந்நிலையில், சஞ்ஜு படக்குழுவினருக்கு சிறையில் உள்ள தாதா அபு சலீம் இன்று வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளான். அதில், ‘நான் சஞ்சய் தத்தை நேரில் சந்திக்கவே இல்லை, என்னை பற்றிய தவறான தகவல்கள் சஞ்ஜு திரைப்பட்டத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே, இந்த முரண்பாடுகளுக்கு படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோரவில்லை என்றால் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×