என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெட் தேர்வு"

    • அவ்வப்போது அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • அவர்களின் தகுதிகள் மற்றும் பல ஆண்டு சேவையைப் புறக்கணிப்பது நியாயமானது அல்ல.

    இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.

    கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆசியர்களை ஒருபோதும் அரசு கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடீவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், "மாநில ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின் தகுதிகள் மற்றும் பல ஆண்டு சேவையைப் புறக்கணிப்பது நியாயப்படுத்தப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    • எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்.
    • தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

    ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைதொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும்,"எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்" என்றார்.

    இதுகுறித்த அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில்," TET தேர்வு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • இரண்டு வருடத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
    • இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

    இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.

    தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

    ஆனால் 2012-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    • TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு.
    • பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியம்.

    TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை.
    • டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம்.

    தாராபுரம்:

    அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 20-ந் தேதிக்கு மேல் தான் சம்பளம் வழங்கப்படுவதாக பலரும் புலம்புகின்றனர்.

    கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியும் என 2009ல் மத்திய அரசு அறிவித்தது.ஆனால், இச்சட்டம் தமிழகத்தில் 2011ல் தான் அமலுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில், அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரினர்.சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் டெட் தேர்வு எழுத தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    அரசுப்பள்ளிகளில் பணிபுரிவோருக்கும் விலக்கு அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோர் மட்டும் டெட் தேர்வில் விலக்கு பெற முடியாமல் தவிக்கின்றனர்.இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை. மகப்பேறு விடுப்பு எடுக்கக்கூட கல்வித்துறை பரிந்துரைக்கவில்லை.

    இந்நிலையில் இவர்களுக்கான ஊதியமும் மாதந்தோறும், 20ந்தேதிக்கு மேல் வழங்குவதாக பலரும் புலம்புகின்றனர்.டெட் நிபந்தனை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம். சம்பளமும் 20ந் தேதிக்கு மேல்தான் வருகிறது.

    உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவதால், நிர்வாகத்திடம் இதைப்பற்றி பேச முடியாது. அரசும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது. தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுத்தேர்வில் சென்டம் ரிசல்ட் தருகிறோம்.இதற்கு மேல் தகுதியை எப்படி நிரூபிப்பது என தெரியவில்லை.சொற்ப ஆசிரியர்களே, டெட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதால் எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

    • ஆண்டுக்கு 2 தடவை ‘டெட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும்.
    • தேர்வை நடத்துவது குறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதி முறைகளின் படி, ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

    2024-ம் ஆண்டு 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகால அட்ட வணையில் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிவடைந்து உள்ள நிலையில் 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை.

    இதனால், 'டெட்' தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது.

    அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வை நடத்த வேண்டும். இப்போது தனியார் சுயநிதி பள்ளிகளில் கூட 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைத் தான் பணிக்கு தேர்வு செய்கிறார்கள்.

    அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான போட்டித் தேர்வை எழுத 'டெட்' தேர்ச்சி அவசியம். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு விரைந்து தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×