என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீண்டும் அமைச்சராக விரும்பினால்..! செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
- செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது.
- தனது நிலைப்பாட்டை நீதிமன்றம் தெளிவாக வழக்கு விசாரணையின்போது கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், செந்தில் பாலாஜி மீது பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பின்னர். அவர் கைதும் செய்யப்பட்டார். இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் அமைச்சராக இருக்கக் கூடாதா? நீதிமன்றம் அப்படி கூற முடியாது என வாதம் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம். ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால் , ஜாமீன் விதிமுறைகளை மீறினார் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், தனது நிலைப்பாட்டை நீதிமன்றம் தெளிவாக வழக்கு விசாரணையின்போது கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு மாற்றுக் கருத்தோ, குழப்பமோ இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் அதிகாரத்தில் இல்லை என்பதால் தான் ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
மீண்டும் அமைச்சராக விரும்பினால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.






