search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kavitha"

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக மார்ச் 15-ம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார்.
    • தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை மே 29-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின், கோர்ட் பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. குற்றவாளிகளான இளவரசன், தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.

    அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் இவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கவிதா நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரது காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியான சந்திரசேகரராவின் மகளான கவிதா கடந்த மாதம் 15-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவரது 3 நாள் சி.பி.ஐ. காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கவிதாவை இன்று கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்தியது. அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    அப்போது கோர்ட்டு வளாகத்தில் கவிதா கூறும்போது, "இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி. பா.ஜனதா வெளியில் என்று போகிறதோ? அதை சி.பி.ஐ. உள்ளே கேட்கிறது. 2 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் கேட்கிறது புதிது இல்லை" என்றார்.

    • கவிதா கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா (வயது 46), கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதன்படி திகார் சிறைக்கு சென்று கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவை 15-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என கவிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா குற்றம் சாட்டினார்.

    மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கவிதா மீது குற்றச்சதி, கணக்குகளை மறைத்தல், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பிஆர்எஸ் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவை வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.

    • வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
    • கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா இன்று காலை ஐதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் வாக்களித்தார்.

    வாக்களித்து விட்டு வந்த பின்னர் பேட்டி அளித்த கவிதா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவி வருகிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்

    இதுதொடர்பாக கவிதா கூறுகையில், ராகுல் காந்தி காட்டு சிங்கம் அல்ல; அவர் ஒரு காகிதப் புலி. ஏனென்றால், யார், எதை எழுதி கொடுத்தாலும், அதைத்தான் படித்துவிட்டுப் போவார். உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார். இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள் அல்லது கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

    • 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில், தேர்தலுக்காக மட்டுமே வருபவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கவிதா கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று தெலுங்கானா வருகிறார்கள். அவர்கள் உத்தரவாதம் அளித்து பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவரை தேர்தல் காந்தி என்றே அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதாரம்’.
    • இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் 'ஆதாரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதாரம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 9 மணிநேரம் விசாரணை நடந்து முடிந்தது.
    • வரும் 16-ம் தேதி ஆஜராக கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

    இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் மகளும், பாரத ராஷ்டிரீய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ம் தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ம் தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஏறக்குறைய அமலாக்கத்துறை 9 மணிநேரம் அவரிடம் விசாரண நடத்தி, கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டது. அதன்பின் அவர் தனது வாகனத்தில் இரவில் விசாரணை முடிந்து புறப்பட்டுச் சென்றார்.

    இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை பணமோசடி வழக்கில் வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கவிதாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    • கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது. அதேபோல் அவரை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.

    இதற்கிடையே இந்த வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகளும் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யுமான கவிதா மீது குற்றம் சாட்டப்பட்டது. மதுபான கொள்கையில் தயாரிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அளித்த சலுகைகளுக்காக கவிதா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் சவுத் குரூப் சார்பில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சப்பணம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தான் 11-ந்தேதி ஆஜராகுவதாக கவிதா அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் தெரிவித்தார். அதன்படி கவிதா இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

    டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது வீட்டு முன்பு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அதே போல் அமலாக்கத்துறை அலுவலகம் அருகேயும் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    காரில் இருந்து இறங்கிய கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்றார். அவரிடம் மதுபான கொள்கை முறைகேட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    • மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி சேரவேண்டும் என்றும் கவிதா தெரிவித்தார்.
    • அமலாக்கத்துறை வழக்கில் கவிதா நாளை மறுநாள் ஆஜராக உள்ளார்

    புதுடெல்லி:

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ரஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா டெல்லி வந்துள்ளார்.

    டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி இனி தேசிய கட்சி அல்ல என்றும், அது எப்போது தன் ஆணவத்தை விட்டுவிட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளுமோ? என்றும் குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் ஒரு அணியின் வீரராக (டீம் பிளேயர்) இருக்க வேண்டும், பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டும், என்றும் கவிதா தெரிவித்தார்.

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நடத்தியது. இதேபோல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாளை மறுநாள் இந்த வழக்கின் விசாரணைக்காக கவிதா ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சிலை கடத்தல் வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை நீக்க கோரியது தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில், சாமி சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பதிவான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. சொல்லி விட்டதால், இந்த வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப் பிரிவு போலீசார் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது, மனுதாரர் வக்கீல் யானை ராஜேந்திரன், "சிலை மாயமான வழக்கில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

    ஜாமீனில் அவர் வெளியில் வந்தார். அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்யவில்லை. எனவே, அவரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்.

    இவரது கோரிக்கை குறித்து வருகிற 10-ந்தேதி, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.  #ChennaiHighCourt #IdolSmugglingCases #IdolTheft
    ×