search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KCR"

    • பண்ணை வீட்டில் கீழே விழுந்த கேசிஆருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது
    • ஜெகன் மோகன் ரெட்டியை கேசிஆர் இல்லத்தில் கேடிஆர் வரவேற்றார்

    கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சியின் தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (KCR) தோல்வியடைந்தார்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே 69 வயதான கேசிஆர், ஐதராபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் பிரபல யசோதா மருத்துவமனைக்கு (Yashoda Hospital) மாற்றப்பட்டார்.

    அங்கு பல்வேறு பரிசோதனைகளில் கேசிஆருக்கு இடுப்பெலும்பில் முறிவு இருப்பதாக கண்டறியப்பட்டு முழு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பின் நடை பயிற்சி மேற்கொண்ட அவருக்கு வலி வெகுவாக குறைந்து அனைத்து துறை மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருந்தார்.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கேசிஆர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது வீட்டிலேயே ஓய்வெடுக்கிறார்.

    இந்நிலையில், ஓய்வில் உள்ள கேசிஆர்-ஐ ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவரது பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) இல்லத்தில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

    முன்னதாக முதல்வர் ஜெகன் மோகனை பிஆர்எஸ் கட்சியின் தற்போதைய தலைவர் கேடி ராமா ராவ், எம்பி ஜே சந்தோஷ் ராவ் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

    விஜயவாடாவிற்கு திரும்பும் முன், கேசிஆர் இல்லத்தில் ஜெகன் மோகன் உணவருந்த உள்ளார் என தெரிகிறது.

    • 64 இடங்களில் வென்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்தது
    • ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவது கவலை அளிக்கிறது என்றார் அஷ்வினி

    கடந்த நவம்பர் மாதம், தெலுங்கானா சட்டசபைக்கான 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகியது.

    தேர்தல் முடிவுகளின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கான மாநிலம் உருவானதிலிருந்து இரு முறை முதல்வராக இருந்த பி.ஆர்.எஸ். (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் தலைவர் கே.சி.ஆர். (கே. சந்திரசேகர் ராவ்) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரேவந்த் ரெட்டியிடம் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். குறித்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசும் போது, "எனது மரபணு (டி.என்.ஏ.) தெலுங்கானாவை சேர்ந்தது. ஆனால், சந்திரசேகர் ராவ், பீகாரிலிருந்து விஜயநகரம் வந்து அங்கிருந்து தெலுங்கானாவிற்கு வந்தவர். பீகார் டி.என்.ஏ.வை விட தெலுங்கானா டி.என்.ஏ. சிறப்பு வாய்ந்தது" என பொருள்பட கூறினார்.

    இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சிற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சவ்பே (Ashwini Choubey) கடுமையாக விமர்சித்தார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் தலைவர்கள் அசுத்த அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒரு முதல்வரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி கவலையளிப்பதும் கூட. பீகார் டி.என்.ஏ. சிறப்பானதுதான். இது குறித்து பதிலளிக்க வேண்டிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்து வருவது ஏன் என தெரியவில்லை. பொதுமக்கள் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அஷ்வினி சவ்பே கூறினார்.

    அஷ்வினியை போன்று பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர் பிரசாத் ரேவந்த் ரெட்டியின் கருத்தை, "பொறுப்பற்ற, வெட்கக்கேடான, நாட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கும் கருத்து" என விமர்சித்துள்ளார்.

    ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு பல பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    • காங்கிரஸ் உட்கட்சி பூசலை நிறைவுக்கு கொண்டு வந்து வெற்றி கண்டார், சுனில்
    • இருமுனை போட்டி மட்டுமே இருக்கும் வகையில் களத்தை தெளிவாக்கினார்

    தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற ஆலோசனைகளை கூறி, வியூகம் அமைத்து தரும் பணியை தனியார் அமைப்புகள் செய்து வருவதை கடந்த சில வருடங்களாகவே இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.

    இதில் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகொலு ஆகியோர் பிரபலமானவர்கள்.

    கடந்த வருடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார் சுனில் கனுகொலு (Sunil Kanugolu). கடந்த மே மாதம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வியூகம் அமைத்து அதன் வெற்றிக்கு வழி வகுத்தார்.

    இதை தொடர்ந்து சுனில், தெலுங்கானாவில் கவனம் செலுத்தினார்.

    தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியிருந்தது.

    காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையின்றி பல தலைவர்களின் கீழ் பல குழுக்கள் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன. முதல் வேலையாக கட்சிக்குள் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என கட்சி தலைமையிடம் எடுத்து கூறி அந்த முயற்சியில் வெற்றி கண்டார் சுனில்.

    சுனிலை முடக்கும் வகையில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும், அப்போதைய முதல்வருமான கே.சி.ஆர்., சுனிலை காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கினார். சுனிலின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரது அலுவலக பொருட்கள் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால், இதில் அச்சமடையாத சுனில், புதிய அலுவலகம் ஒன்றை அமைத்து மீண்டும் மன உறுதியுடன் காங்கிரஸ் வெற்றி பெற செயல்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்க கூடிய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், தன்னை எங்குமே முன்னிறுத்தி கொள்ள விரும்பாதவரான சுனில், ஊடகங்களை அறவே தவிர்ப்பவர்.

    பா.ஜ.க.விற்கு செல்ல கூடிய வாக்குகளால் கே.சி.ஆர். மீண்டும் பதவியில் அமர முடியும் என முதலிலேயே கணித்து அதை தகர்க்க துல்லியமாக திட்டமிட்டார். தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் தாக்கத்தை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பிரசாரத்திற்கும் திட்டமிட்டு தந்தார்.

    தன்னை கைது செய்ய உத்தரவிட்டிருந்த கே.சி.ஆர். மீது கோபத்தில் இருந்த ஒய்.எஸ்.ஆர். மகள் ஒய்.எஸ். ஷர்மிளா தேர்தலில் போட்டியிடாமல் நின்றால் ஓட்டு பிரிவை தடுக்க முடியும் என புரிய வைத்து அந்த முயற்சியில் வெற்றி பெற்றார்.

    அதே போன்று தெலுகு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தலில் நிற்பதையும் சாதுர்யமாக பேச்சு நடத்தி தடுத்தார்.


    இதனால், 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். என் இருமுனை போட்டி மட்டுமே நடைபெறும் வகையில் களத்தை தெளிவாக்கினார்.

    சுனில் கனுகொலு கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியின் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். சென்னையில் வளர்ந்தவரான சுனில் அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்.

    நிர்வாக மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற மெக்கின்சே (McKinsey) நிறுவனத்தில் பணியாற்றியவர்.

    இந்தியா திரும்பிய சுனில் அசோசியேஷன் ஆஃப் பில்லியன் மைண்ட்ஸ் (ABM) எனும் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் வகுத்து தரும் நிறுவனத்தை தொடங்கி பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர்.

    கல்வகுன்ட்லா சந்திரசேகர் ராவ் (KCR) வகுத்த வியூகங்கள், கனுகொலு சுனில் வியூகங்கள் முன் எடுபடாமல் தோற்றதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முயற்சி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    இதுதொடர்பாக முதல் மந்திரி தங்களை அணுகியதாக எங்கள் வேட்பாளர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    • ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார்.
    • சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ்- தனது கட்சி மாநிலத்திற்காக என்ன செய்துள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே மிகவும் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இவரது ஆட்சியில் பணம் கொட்டும் இலாகாக்கள் அனைத்தும் சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதோடு காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் அளித்திருக்கும் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டம் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இயற்றப்பட்டு விடும், அவை நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "தெலுங்கானாவில் தற்போது நில பிரதிநிதித்துவ அரசு மற்றும் மக்கள் அரசிடையேயான போட்டி நிலவி வருகிறது. உங்களது முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி என்ன செய்திருக்கிறது என கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, கே சந்திரசேகர ராவ் என்ன செய்திருக்கிறார் என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்," என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி கே.சி.ஆர். மக்களைச் சந்திக்காமல் பண்ணை வீட்டில் முடிவுகளை எடுக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், இது முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறோம். நீங்கள் விரும்பிய வளர்ச்சி நடக்கவில்லை. சாலை சரியில்லை, பாசனமும் நடக்கவில்லை. ஆனால், கே.சி.ஆர். கவலைப்படவில்லை. அவர் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார், மக்களைச் சந்திப்பதில்லை என தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் கோத்தா பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரித்து வந்தார்.

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் துபாக்கா தொகுதியில் போட்டியிடும் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி சித்திப்பெட் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் அங்கமாக மாநிலத்தில் உள்ள பாஸ்டர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை நோக்கி வந்த மர்ம நபர் அவரிடம் கை குலுக்குவது போன்றே அருகில் சென்றார். பிறகு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார். கத்தியால் குத்திய மர்ம நபரை பி.ஆர்.எஸ். தொண்டர்கள் மடக்கி பிடித்து, அங்கேயே வைத்து அடித்தனர். பிறகு மர்ம நபரை காவல் துறை கைது செய்தது.

    கத்தியால் குத்தப்பட்ட பிரபாகர் ரெட்டி கஜ்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பிறகு அங்கிருந்து செகரந்தாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் பிரபாகர் ரெட்டியை தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் கோத்தா பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரித்து வந்தார்.

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் துபாக்கா தொகுதியில் போட்டியிடும் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி சித்திப்பெட் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் அங்கமாக மாநிலத்தில் உள்ள பாஸ்டர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரை நோக்கி வந்த மர்ம நபர் அவரிடம் கை குலுக்குவது போன்றே அருகில் சென்றார். பிறகு, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார். கத்தியால் குத்திய மர்ம நபரை பி.ஆர்.எஸ். தொண்டர்கள் மடக்கி பிடித்து, அங்கேயே வைத்து அடித்தனர். பிறகு மர்ம நபரை காவல் துறை கைது செய்தது.

    கத்தியால் குத்தப்பட்டதும், பிரபாகர் ரெட்டி கஜ்வெல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

    "திடீரென தாக்குதல் நடத்திய மர்ம நபரை கைது செய்திருக்கிறோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என சித்திப்பெட் காவல் துறை ஆணையர் ஸ்வேதா தெரிவித்து உள்ளார்.

    • பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், அங்கு ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது
    • குடும்ப ஊழல் மாநிலம் தாண்டி டெல்லி வரை பரவியிருக்கிறது

    இந்தியாவின் தெலுங்கானா மாநில 119 சட்டசபை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 30 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    தற்போது தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி புதியதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் தற்போதைய பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

    இரு கட்சியின் முக்கிய தலைவர்களும் இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானாவின் கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசுராபாத் (Huzurabad) பகுதியில் தெலுங்கானா பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 வருடங்களில் தெலுங்கானாவின் வளர்ச்சி ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சியாக மாறி விட்டது. எங்கும் கே.சி.ஆர். குடும்பத்தின் ஆதிக்கம் தெரிகிறது. தெலுங்கானாவில் மக்களாட்சி நடைபெறவில்லை; தனியார் குடும்ப நிறுவனத்தின் ஆட்சிதான் நடக்கிறது. கே.சி.ஆர். ஆட்சியை நடத்தத்தான் அவருக்கு மக்கள் வாக்களித்தனர்; அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி நடத்த அல்ல. நான் அவர் குடும்ப உறுப்பினர் எவர் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஊழலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கே.சி.ஆர். குடும்ப ஊழல் ஹைதராபாத்துடன் மட்டுமே நிற்காமல் டெல்லி வரை பரவியிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் மு.க. ஸ்டாலின் போன்ற முதல்வர்களும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கொள்கிறார்கள்.
    • ஜனநாயகத்திற்குத் தேவையான அரசியல் கலாச்சாரம் அதுதான்.

    பிரதமர் மோடி நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ.6100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடியின் இந்நிகழ்ச்சிக்கு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கு கேசிஆர் கலந்துக் கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை கேசிஆர் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல.

    இதுகுறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராம்சந்தர் ராவ் கூறுகையில், " பிரதமர் நரேந்திர மோடி 14 மாதங்களில் 5 முறை தெலுங்கானா வந்துள்ளார். ஆனால், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு முறை கூட அவரை வரவேற்க வந்ததில்லை.

    தெலுங்கானா முதல்வர் அந்தஸ்துக்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை. மாநிலத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் மு.க. ஸ்டாலின் போன்ற முதல்வர்களும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பணிவுடன் உள்ளனர். பிஜேபியை அரசியல் ரீதியாக எதிர்த்தாலும், நெறிமுறையின்படி பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.

    முன்பு ராஜீவ் காந்திக்கும், என்டிஆருக்கும் இடையே கசப்பான அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தும், என்.டி.ராமாராவ் ராஜீவ் காந்தியை வரவேற்க வந்தார்.

    ஜனநாயகத்திற்குத் தேவையான அரசியல் கலாச்சாரம் அதுதான். இன்று முதல்வரின் நடத்தை வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. தெலுங்கானா மக்கள் முதல்வர் கே.சி.ஆரால் அவமதிக்கப்படுகிறார்கள். தெலுங்கானா மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
    சென்னை:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்  சந்திக்க உள்ளார்.



    இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    “திமுக பொருளாளர் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு?

    தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு? இங்கே திண்ணை நாடகம்; அடுத்து டெல்லியில் கட்சி / அணி மாறிகளின் தெருக்கூத்து?”

    இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து அவர் விமர்சனம் செய்துள்ளார்.



    ×