என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் அரசியலில் இருக்கும் வரை கே.சி.ஆர். குடும்பத்தை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டேன்: ரேவந்த் ரெட்டி சபதம்
    X

    நான் அரசியலில் இருக்கும் வரை கே.சி.ஆர். குடும்பத்தை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டேன்: ரேவந்த் ரெட்டி சபதம்

    • 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
    • இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவருடைய கோடங்கல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2029 தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.

    உங்கள் அரசியல் என்னவென்று நான் பார்க்கிறேன். நான் அரசியலில் இருக்கும் வரை, விஷம் போன்ற கே.சி.ஆர். குடும்பத்தை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டேன். இது எனது சபதம். கோடங்கல் மண்ணின் மைந்தனாக இந்த மண்ணில் இருந்து இந்த சபதத்தை நான் ஏற்கிறேன்.

    நான் அரசியலில் இருக்கும் வரை, கே.சி.ஆருக்கு அதிகாரம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    முன்னதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ், காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அது பயனற்ற ஆட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×