என் மலர்tooltip icon

    இந்தியா

    கேசிஆர்-க்கு சம்மன்: நீதித்துறை கமிஷன் அல்ல, அது காங்கிரஸ் கமிஷன்- கே. கவிதா சாடல்
    X

    கேசிஆர்-க்கு சம்மன்: நீதித்துறை கமிஷன் அல்ல, அது காங்கிரஸ் கமிஷன்- கே. கவிதா சாடல்

    • காலேஷ்வரம் திட்டம் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கே.சி.ஆர்-க்கு சம்மன்.
    • சந்திரசேகர ராவ் பெயரை கெடுக்கவே இந்த சதி தீட்டப்பட்டுள்ளது என கவிதா குற்றச்சாட்டு.

    காலேஷ்வரம் திட்டம் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர கே. சந்திரசேகர ராவுக்கு நீதித்துறை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் நாளை ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    சந்திரசேகர ராவ் நாளை ஆஜராகுவதற்குப் பதிலாக வருகிற 11ஆம் தேதி ஆஜராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரசேகர ராவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதித்துறை ஆணையம் காங்கிரஸ் ஆணையம் என்று அழைக்கப்படுகிறது என சந்திரசேகர ராவ் மகளும், பிஆர்ஆஸ் கட்சி தலைவருமான கே. கவிதா கடுமையாக சாடியுள்ளார்.

    இது தொடர்பாக கே. கவிதா கூறுகையில் "காலேஷ்வரம் திட்டம் முடிவடைந்த பின்னர் மொத்தமாக 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதெல்லாம் புறந்தள்ளப்பட்டுள்ளது. சந்திரசேகர ராவ் பெயரை கெடுக்கவே இந்த சதி தீட்டப்பட்டுள்ளது.

    200 டிஎம்சி கோதாவரி ஆற்றின் நீரை பயன்படுத்துவது தொடர்பான போலாவரம்-பனகச்செர்லா திட்டத்தை ஆந்திர அரசு முன்மொழிந்துள்ள நிலையில், ரேவந்த் ரெட்டி அமைதியாக இருந்து வருகிறார்.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் மகள் கே. கவிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    போலாவரம்- பனகச்செர்லா திட்டம் முக்கிய குறிக்கோள் கோதாவரி ஆற்றின் உபரி நீரை, வறட்சியான பிராந்திகளுக்கு மாற்றுவதாகும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×