என் மலர்
நீங்கள் தேடியது "5 state assembly election"
- பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார்.
- மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா அடுத்து 5 மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்றும் பா.ஜ.கவுக்கு மிக மிக முக்கியமான மாநிலங்களாகும்.
கர்நாடகா போல இந்த மாநிலங்களையும் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதில் பா.ஜனதா தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. இதற்காகவே ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்களுக்கு மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு வருகிறார்கள்.
இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக அமித்ஷா நேற்று டெல்லியில் ஓசையின்றி அதிரடி அலசலில் ஈடுபட்டார். அவருடன் ஜே.பி.நட்டா, சந்தோஷ் உள்பட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
அப்போது பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வந்ததும், மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளில் சிலரை 5 மாநில தேர்தலுக்கு பொறுப்பாளராக அனுப்ப ஆலோசிக்கப்பட்டது.
இது தவிர பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார். மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.
ஆனால் இந்த தகவல்கள் பா.ஜ.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குக் கூட முழுமையாக தெரியவில்லை. அந்தளவுக்கு அமித்ஷா ரகசியமாக காய்களை நகர்த்த தொடங்கி உள்ளார்.
- கடந்த 2018-ம் ஆண்டு 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை அந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பிரதமர் மோடி தெலுங்கானாவில் 2 நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.
திருப்பதி:
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.
அப்போது 5 மாநிலங்களின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்தவாரம் 5 மாநிலங்ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை அந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் பா.ஜ.க. சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து உள்ளது. ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் பணியை தொடங்கி சுறுசுறுப்பாக பணி செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தெலுங்கானாவில் 2 நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.
இதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.
தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
- தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தனி பெரும்பான்மை பெற 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.
வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2014-ம் ஆண்டு மாநிலம் உருவான போது அதிக செல்வாக்கு உள்ள பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த சந்திரசேகரராவ் ஆட்சியை பிடித்தார்.
தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அவர் 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு விதமான வியூகம் வகுத்து வருகிறார்.
மாநிலத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. 115 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. சந்திரசேகரராவ் கட்சியில் அவரது மகள் கவிதாவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் வாரிசு அரசியல் என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.
ஆனாலும் அவற்றையெல்லாம் உடைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி 2 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். தொடர்ந்து அமித்ஷா மத்திய மந்திரிகளும் பிரசார ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தெலுங்கானாவில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்குகிறது. நடிகைகள் விஜயசாந்தி, ஜெயசுதா உள்ளிட்ட 25 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வாக்குகளை பெறுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது.
அப்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் விவசாயிகளுக்கு உதவி தொகை என 6 முக்கிய வாக்குறுதிகளை சோனியா காந்தி அறிவித்தார். இதன் மூலம் பெண்கள் வாக்குகளை எளிதாக கவர முடியும் என காங்கிரஸ் கணக்கிட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்மிளாவை அந்த கட்சியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அது நிறைவேறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிக்க ஆளும் பி.ஆர். எஸ். கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
- மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
- பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்திலிருந்து 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் புதிதாக உருவானது.
அப்போது மாநில பிரிவினைக்கு பெரும் பங்கு வகித்த சந்திரசேகர ராவ் கட்சி 63 இடங்களை கைபற்றி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு பின்னர் 2018-ம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களை பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில் நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார்.
அவருக்கு ராசியான இடமாக கருதப்படும் ஹீஸ்னாபபாத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை வருகிற 15-ந்தேதி தொடங்குகிறார். அன்று காலை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.
வழக்கம் போல காமரெட்டி பகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னதாக கோனை பள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 15-ந்தேதி வேட்பாளர்களுக்கு பி-படிவங்களையும் அவர் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா அறிவித்துவிட்டது.
- ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி நேற்று அணிவிக்கப்பட்டு மிசோரம் மாநிலத்துக்கு நவம்பர் 7-ந்தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17-ந்தேதியும், மத்திய பிரதேசத்துக்கு நவம்பர் 17-ந்தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23-ந்தேதியும், தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும்.
5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் டெல்லியில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா அறிவித்துவிட்டது.
ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
- மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
5 மாநிலங்களிலும் கடந்த திங்கட்கிழமை முதல் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 5 மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 5 மாநில தேர்தலில் மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஆனால் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17-ந்தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 40 சட்டசபை தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அங்கு மனு தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாளாகும்.
21-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 23-ந்தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக நவம்பர் 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கலும் இன்று தொடங்கியது.
- 5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
ராய்ப்பூர்:
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
மிசோரம் மாநிலத்தில் வருகிற 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடக்கிறது.
5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தலைவர்கள் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அங்கு தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இங்கு இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சத்தீஸ்கரில் நேற்று பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.
- தேர்தல் களத்தில் மோடியும், அமித்ஷாவும் பிரசாரம் செய்தால் வெற்றி என்கிறார்கள் பா.ஜனதாவினர்.
- கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் இருவரும் கை கோர்த்து பிரசாரத்துக்கு சென்றார்கள். ஆனால் ‘கை’ வென்றது.
சென்னை:
நேரு பிறந்த நாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுக்கு முகம் கொடுத்தவர் நேரு. ஒரு குண்டூசி கூட செய்ய முடியாத நிலையில் இருந்த இந்தியாவை உலகின் தொழிற்கூடமாக உருவாக்கினார்.
ஒரு வேளை சோற்றுக்கு அமெரிக்காவை எதிர்பார்த்த நிலையில் ஐந்து ஆண்டு திட்டங்கள் மூலம் பசுமை நிறைந்த நாடாக உருவாக்கினார்.
இதர பிற்பட்ட சமூகத்துக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார் மோடி. சிறந்த கல்வி கற்பதும், வேலை செய்வதும் எல்லோருக்குமான வாய்ப்பாக இல்லாத காலகட்டத்தில் முதல் அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து ஓ.பி.சி.க்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்து முன்னேற வைத்து சமூக நீதியை நிலை நாட்டினார்.
தேர்தல் களத்தில் மோடியும், அமித்ஷாவும் பிரசாரம் செய்தால் வெற்றி என்கிறார்கள் பா.ஜனதாவினர்.
கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் இருவரும் கை கோர்த்து பிரசாரத்துக்கு சென்றார்கள். ஆனால் 'கை' வென்றது. அவர்கள் கைகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனது. தோற்றார்கள் என்பது மட்டுமல்ல 33 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தார்கள். இதுதான் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மக்கள் கொடுத்த பரிசு.
இப்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மீண்டும் இதே நிலையை சந்திப்பார்கள். பல தொகுதிகளில் டெபாசிட்டை இழக்கும் வகையில் படுதோல்வியை சந்திப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.
- காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
ஜெய்ப்பூர்:
5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் கடந்த 7-ந்தேதியும், 230 இடங்களை கொண்ட மத்திய பிரதேசத்துக்கு கடந்த 17-ந்தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை மறுநாள் (25-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி பில்வாரா, துர்காபூரில் தேர்தல் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தோல்பூர், பரக்பூர் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்தார். காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் இன்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
- காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை.
- குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற பா.ஜனதா சதி செய்கிறது. மஹாதேவ் சூதாட்ட செயலியும், சிவப்பு டைரி விவகாரமும் பா.ஜனதாவால் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு விவகாரங்களும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும்.
ராஜேஷ் பைலட் குறித்து பேசுவதன் மூலம் குர்ஜார் சமூக மக்களை பிரதமர் மோடி தூண்டிவிட முயற்சிக்கிறார். பா.ஜனதா ஆட்சியில் இட ஒதுக்கீடு கேட்டு போராடிய குர்ஜார் சமூகத்தை சேர்ந்த 72 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தனர். இன்று அந்த சமூக மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் பா.ஜனதாவினர் பேசி வருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.
சதி கோட்பாடுகளை உருவாக்கி மக்களை தவறாக வழி நடத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா நினைக்கிறது.
இவ்வாறு அசோக் கெலாட் கூறியுள்ளார்.
- நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதற்கான இறுதிகட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து இருந்தது.
அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இன்று நிதி உதவி வரவு வைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்து இருந்தார். நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.
- வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
- கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.
தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா இன்று காலை ஐதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் வாக்களித்தார்.
வாக்களித்து விட்டு வந்த பின்னர் பேட்டி அளித்த கவிதா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.






