search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5 மாநில சட்டசபை தேர்தல்: சத்தீஸ்கர்- மிசோரமில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    5 மாநில சட்டசபை தேர்தல்: சத்தீஸ்கர்- மிசோரமில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

    • 5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
    • 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    ராய்ப்பூர்:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    மிசோரம் மாநிலத்தில் வருகிற 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடக்கிறது.

    5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தலைவர்கள் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அங்கு தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இங்கு இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சத்தீஸ்கரில் நேற்று பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

    Next Story
    ×