என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய வரைபடம்"
- இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இந்திய வரைபடத்தை வெளியிட்டது.
- அதில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டன்:
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் செய்து அமெரிக்காவின் ஆதரவைப்பெற முயற்சி செய்தனர். சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீர் ஒற்றுமை தின உரையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இதுகுறித்து சர்ச்சையான கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு இன்று அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா காட்டியுள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட இந்த வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி என்பதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேபோல், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
- ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
- நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பிராந்தியங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நேபாளத்தின் அப்போதைய கே.பி.சர்மா ஒலி அரசு, இந்த பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிட்டது. இதை அந்த நாட்டு பாராளுமன்றமும் பின்னர் அங்கீகரித்தது.
இதற்கு அப்போது இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
தற்போது இந்த பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு உள்ளது. நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பார்த்தபடி சென்றனர்.
- சர்வதேச ஆயுர்வேத தினம் இந்தியா முழுவதும் ஒரு மாத காலம் கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி:
ஆயுர்வேத மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவரும் அதன் நிறுவனருமான தன்வந்திரியின் பிறந்த தின விழா சர்வதேச ஆயுர்வேத தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆயுர்வேத துறை சார்பில் இந்த ஆண்டு 7-வது சர்வதேச ஆயுர்வேத தினம் இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதிவரை ஒரு மாத காலம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சார்பில் கன்னி யாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நேற்று 7-வது தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ்டேவி தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற் கரை பகுதியில் நாகர் கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 கிலோ உப்பை பயன்படுத்தி தேசியக் கொடியின் நிறமான சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண கொடி நிறத்தில் இந்திய வரை படத்தை வரைந்து அதன்நடுவே ஆயுர்வேத சின்னத்தை வண்ண ஓவிய மாக வடிவமைத்து வைத்து இருந்தனர்.
மேலும் மத்திய அரசின் ஆயுர்வேத துறையின் திட்ட மான "இல்லம் தோறும் தினம் தினம் ஆயுர்வேதம் திட்டம்" பற்றிய விழிப்புணர்வு வாசகங்களும் உப்பு கற்கள் மூலம் எழுதப்பட்டு மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர் கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி துறை தலைவர் ரபேலா மற்றும் மருத்துவர்கள்ராய், வில்சன், லேகா, திரு நாவுக்கரசு மற்றும் முதலாம் ஆண்டு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர்.
கன்னியா குமரி திரிவேணி சங்கமம் கடற்கரை யில் உப்பை பயன்ப டுத்தி மூவர்ண நிறத்தில் இந்திய வரைபடம் வண்ண ஓவிய மாக தீட்டப்பட்டிருந்ததை சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பார்த்தபடி சென்றனர். சிலர் அதனை தங்களது செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துச் சென்றனர்.






