என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சர்வதேச ஆயுர்வேத தினத்தையொட்டி 200 கிலோ உப்பை பயன்படுத்தி இந்திய வரைபடம்
  X

  நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் 200 கிலோ உப்பை பயன்படுத்தி தேசியக் கொடியினை ஓவியமாக வடிவமைத்து வைத்து இருந்ததை படத்தில் காணலாம்.

  சர்வதேச ஆயுர்வேத தினத்தையொட்டி 200 கிலோ உப்பை பயன்படுத்தி இந்திய வரைபடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பார்த்தபடி சென்றனர்.
  • சர்வதேச ஆயுர்வேத தினம் இந்தியா முழுவதும் ஒரு மாத காலம் கொண்டாடப்படுகிறது.

  கன்னியாகுமரி:

  ஆயுர்வேத மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவரும் அதன் நிறுவனருமான தன்வந்திரியின் பிறந்த தின விழா சர்வதேச ஆயுர்வேத தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆயுர்வேத துறை சார்பில் இந்த ஆண்டு 7-வது சர்வதேச ஆயுர்வேத தினம் இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதிவரை ஒரு மாத காலம் கொண்டாடப்படுகிறது.

  இதையொட்டி நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சார்பில் கன்னி யாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நேற்று 7-வது தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ்டேவி தலைமை தாங்கினார்.

  கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற் கரை பகுதியில் நாகர் கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 கிலோ உப்பை பயன்படுத்தி தேசியக் கொடியின் நிறமான சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண கொடி நிறத்தில் இந்திய வரை படத்தை வரைந்து அதன்நடுவே ஆயுர்வேத சின்னத்தை வண்ண ஓவிய மாக வடிவமைத்து வைத்து இருந்தனர்.

  மேலும் மத்திய அரசின் ஆயுர்வேத துறையின் திட்ட மான "இல்லம் தோறும் தினம் தினம் ஆயுர்வேதம் திட்டம்" பற்றிய விழிப்புணர்வு வாசகங்களும் உப்பு கற்கள் மூலம் எழுதப்பட்டு மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர் கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி துறை தலைவர் ரபேலா மற்றும் மருத்துவர்கள்ராய், வில்சன், லேகா, திரு நாவுக்கரசு மற்றும் முதலாம் ஆண்டு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர்.

  கன்னியா குமரி திரிவேணி சங்கமம் கடற்கரை யில் உப்பை பயன்ப டுத்தி மூவர்ண நிறத்தில் இந்திய வரைபடம் வண்ண ஓவிய மாக தீட்டப்பட்டிருந்ததை சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக பார்த்தபடி சென்றனர். சிலர் அதனை தங்களது செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துச் சென்றனர்.

  Next Story
  ×