search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசுக்கான  ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்
    X


    பட்டாசு வணிகர் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்றவர்கள்.




    பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்

    • பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சிவகாசியில் நடந்த பட்டாசு வணிகர் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சிவகாசி

    சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு நடந்தது. மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி, ராஜன் முன்னிலை வகித்தனர்.

    சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி வரவேற்றார். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், டான்பாமா சங்கத்தலைவர் கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காலத்திற்கு ஏற்றவாறு பட்டாசு உற்பத்தியில் மாற்றங்களை கொண்டு வருவதால் பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசி தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கி வருகிறது. சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் 100 ஆண்டுகளைக் கடந்து இந்த தொழில் சிறப்பாக செயல்படுவதற்கு சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர்களே காரணம் ஆவார்கள். பட்டாசு உற்பத்தி, பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார்.

    மாநாட்டு மலரை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் வெளியிட, மாணிக்கம் தாகூர் எம்.பி. பெற்றுக்கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் பேசுகையில், நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து அதிகாரிகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க முன்வரவில்லை.

    உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் முதலில் தீர்வு காண வேண்டும். பட்டாசு ஏற்றுமதி செய்ய பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. தற்போது இலங்கை யில் உள்ள கொழும்பு துறைமுகம் வழியாக பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தமிழக முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசு கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்குவது, விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் வழங்குவது, தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிப்பது, பட்டாசுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்

    Next Story
    ×