search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி.எஸ்.டி. விதிப்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
    X

    நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி.துறை ஆணையர் சுதா கோக்கா பேசியபோது எடுத்த படம்.

    ஜி.எஸ்.டி. விதிப்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

    • 49-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்ட பரிந்துரைகளை விளக்கும் நிகழ்ச்சியை ஓசூரில் நேற்று நடத்தின.
    • பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்தனர்.

    ஓசூர்,

    சேலம் மத்திய சேவைத்துறை மற்றும் ஜி.எஸ்.டி ஆணையரகமும், ஓசூர் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கமும் (ஹோஸ்டியா) இணைந்து, 2023- 24 ஆம்ஆண்டிற்கான, மத்திய வரவு செலவு அறிக்கையில் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்த விழிப்புணர்ச்சி மற்றும் 49-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்ட பரிந்துரைகளை விளக்கும் நிகழ்ச்சியை ஓசூரில் நேற்று நடத்தின.

    ஓசூர் ஹோஸ்டியா அலுவலத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சேலம் ஜி.எஸ்.டி.துறை ஆணையர் சுதா கோக்கா, உதவி ஆணையர் ஜெய சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு 2023- 24 நிதியாண்டு அறிக்கையில் ஏற்பட இருக்கும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் சரக்கு மற்றும் ஜி.எஸ்.டி. சம்பந்தமான மாற்றங்கள் மற்றும் 49 -வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் குறித்து விளக்கி பேசினர். மேலும்,வர்த்தக மற்றும் தொழிற்துறை

    பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்தனர். நிகழ்ச்சியில், சேலம் ஜி.எஸ்.டி. துறை இணை ஆணையர் ராஜேஷ் வி.ஷெல்கே, ஹோஸ்டியா சங்க தலைவர் கே.வேல்முருகன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில், துறை அலுவலர்கள், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைக்கான கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×