என் மலர்
நீங்கள் தேடியது "RIP Karunanidhi"
அமெரிக்காவில் சர்கா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #Vijay
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய், நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி#Karunanidhi#KarunanidhiMemorial#Vijay@actorvijaypic.twitter.com/2y3FX1hDOv
— Thanthi TV (@ThanthiTV) August 13, 2018
முன்னதாக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன், சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு, சூரி, விஷால், நந்தா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #Vijay
திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டியளித்த நடிகர் விஜயகுமார், கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar
மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
3-வது நாளாக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெளியூர்களில் இருந்தும் பலர் அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணமாக உள்ளனர்.
முன்னதாக நடிகர் கார்த்தி நேற்று கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், இன்று காலை நடிகை ஜெயசித்ரா கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஹரி மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இன்று காலை கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் விஜயகுமார் பேசியபோது, கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார். #Karunanidhi #Vijayakumar #JeyaChitra
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே, கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha
திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர்.
இந்த நிலையில், மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இன்று காலை கவிஞர் வைரமுத்து அவரது மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha
இசை கச்சேரிக்காக ஆஸ்திரேலியா வந்திருப்பதால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா வீடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi
சென்னை:
ஆஸ்திரேலிய நாட்டுக்கு இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்று இருக்கும் இசை அமைப்பாளர் இளையராஜா கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் ஐயா மறைந்தது நமக்கு எல்லாம் துக்க தினம் தான். இந்த துக்கத்தில் இருந்து எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை.
அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் ஐயா. சினிமா துறையிலே தூய தமிழ் வசனங்களை அளித்த கடைசி வசனகர்த்தா ஐயா. அரசியல், சினிமா, தமிழ், கலை, இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய ஐயாவின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இந்த நேரத்தில் நான் இங்கு ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது குழுவினருடன் வந்து இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க முடியவில்லை. ஐயாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார். #Karunanidhi #KarunanidhiFuneral #KalaignarAyya #Ilayaraja
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Vairamuthu
திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி மற்றும் ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர்.
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர்.

மேலும் கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார். #Karunanidhi #KarunanidhiFuneral #KalaignarAyya #Vairamuthu
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
சென்னை:
ராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதி உடலை தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.கலைஞர் உடல் உள்ள இடத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு தொண்டர் கூட்டத்தை அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்.
கருணாநிதி உடலை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு குழுமியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக உடல் அரங்கத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்த சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.
கூட்டம் கட்டுகடங்காமல் போகவே தொண்டர்களிடையே தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி அவர்களும் கலைந்து போகுமாறு கூறினார்.
ராஜாஜி அரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண் போலீசார் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த செண்பகம் (60), மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழப்பு: 8 பேர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். #Kalaignar #Karunanidhi #Nayanthara
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.
மேலும் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தற்போது நடிகை நயன்தாரா இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.
நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிக சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம்.
நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது! அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை.
அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறேன். வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AmitabhBachchan
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.
மேலும் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
T 2893 - பிரார்த்தனை மற்றும் இரங்கல் , for the Honourable and dynamic leader Shri Karunanidhi .. I received my very 1st National Award for 'Saat Hindustani' from him, when the ceremony was held in Chennai that year .. he was the CM ..🙏🙏🙏 pic.twitter.com/lu9Mc886EX
— Amitabh Bachchan (@SrBachchan) August 8, 2018
மேலும் டுவிட்டரில் பல பிரபலங்கள் ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சிறந்த தலைவர் கருணாநிதி, அவர் முதலமைச்சராக இருக்கும் போது நான் விருது வாங்கி இருக்கிறேன். அவருக்கு என்னுடைய பிரார்த்தனை மற்றும் இரங்கல் என்று பதிவு செய்திருக்கிறார்.
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
சென்னை:
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரி லால் பிரோகித், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்துமுறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vikram
கருணாநிதியை நல்லடக்கம் செய்ய உள்ள பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. #RIPKarunanidhi
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஞ்சலிக்கிடையே மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அதன்பின் அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
அவரது உடல் வைக்கப்படும் சந்தன பேழையில் ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது.