search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Madhan Karky"

  • டான்ஸை வைத்து உருவாகியுள்ள வெப் தொடர் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'.
  • இந்த வெப் தொடர் நவம்பர் 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

  விஜய், பிரசன்னா ஜே.கே, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'. நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு உருவாகிவுள்ள இந்த வெப் தொடரில் தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


  ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

  'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்' வெப் தொடர் நவம்பர் 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது, " டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை, ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம் அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று பேசினார்.

  மேலும், நடிகர் ஜீவா பேசியதாவது, "ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்" என்று கூறினார்.

  தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாரி 2 படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

  ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்நாட் எக்ஸ் சார்பில் சசிகாந்தின் இந்த படத்தை வெளியிடுகிறார்.

  அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். நிகோலாஸ் எறேரா பின்னணி இசையமைத்துள்ளார்.


  இது குறித்து தனுஷ் கூறுகையில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்றார்.

  நார்தன் இயக்கத்தில் சிம்பு - கவுதம் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் சிம்புவின் 45-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #STR45 #GauthamKarthik
  `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், சிம்பு அடுத்ததாக கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

  சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிக பொருட்செலவில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  இதுபற்றி ஞானவேல் ராஜா கூறும்போது, முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.

  நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

  ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள `தேவராட்டம்' படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #STR45 #STR #GauthamKarthik #Narthan

  நார்தன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் சிம்பு மற்றும் கவுதம் இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #STR45 #GauthamKarthik
  `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

  கன்னடத்தில் `மஃப்டி' என்ற வெற்றிப் படத்தை இயக்கிய நார்தன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


  அதிக பெருட்செலவில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மதன் கார்க்கி இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள `தேவராட்டம்' படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #STR45 #STR #GauthamKarthik #Narthan

  காஞ்சனா 3 படத்தில் DooPaaDoo தளம் மூலம் திறமையான இளைஞர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருப்பதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். #DooPaaDoo #MadhanKarky
  சுயாதீன இசை கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது DooPaaDoo. ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. 

  பாடலாசிரியரும், DooPaaDoo-வின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, "இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017-ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டூடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.   காஞ்சனா 3-ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDoo-வை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது." என்றார். #DooPaaDoo #MadhanKarky #Kanchana3 #RaghavaLawrence

  உண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu
  கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

  சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து ஒருமுறை மட்டுமே வைரமுத்து கருத்து தெரிவித்தார். அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் வைரமுத்து பங்கேற்காமலே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினரும் விளக்கம் அளிக்காமலேயே இருந்து வந்தனர்.

  இந்த நிலையில் வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் ஆகியோர் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு திடீரென விளக்கம் அளித்துள்ளனர்.  மதன் கார்க்கி, ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய பாடலையே உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். அது தொடர்பான ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

  ‘‘உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.

  சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.’’

  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இன்னொரு மகனான கபிலன் வைரமுத்துவும், தந்தைக்கு ஆதரவாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

  ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

  அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும் போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர்.

  படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்று விட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.

  அப்பாவும், அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின் விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர். தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.

  அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட வாழ்க்கை பெருமை வாய்ந்தது.

  தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சினையை பொழுதுபோக்காகச் சித்தரித்து பல பிரச்சினைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu

  சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Vairamuthu
  திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

  முன்னதாக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி மற்றும் ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

  கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர்.   மேலும் கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார். #Karunanidhi  #KarunanidhiFuneral #KalaignarAyya #Vairamuthu

  ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து அவரது குடும்பத்துடன்நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vairamuthu
  சென்னை:

  காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

  இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
  இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கிமற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar  #Vairamuthu

  நிவின் பாலி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘காயம்குளம் கொச்சூன்னி’ படத்தில் பிரபல வசனகர்த்தாவும், பாடலாசிரியரும் இணைந்திருக்கிறார். #NivinPauly
  நிவின் பாலி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காயம்குளம் கொச்சூன்னி’. இவருடன் இப்படத்தில் பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேன், பாபு ஆண்டனி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

  தற்போது இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது. 

  நேரடி மற்றும் புத்தம் புதிய ஸ்கிரிப்ட்க்கு வசனம் எழுதுவதே ஒரு கடினமான பணியாக இருக்கும்போது, அதுவும் டப்பிங் பதிப்புகளுக்கு எழுதுவது எப்படி இருக்கும். இந்த வகையில், மதன் கார்க்கி பாகுபலி படங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான 'நடிகையர் திலகம்' படத்துக்கும் வசனம் எழுதியது ஒரு மகத்தான, தனித்துவமான சாதனை. இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு 'நுழைவாயில்' ஆனார் மதன் கார்க்கி.  இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிக தலைப்பாக 'மலைக்கள்ளன்' என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  ×