search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kabilan Vairamuthu"

  • கபிலன் வைரமுத்து எழுதிய "ஆகோள்" இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.
  • ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது.

  எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைர முத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920-ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது.

   

  பாரதிராஜா

  பாரதிராஜா

  ஆகோள் குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பட்டிருக்கிறேன். இந்த கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

  உண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu
  கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

  சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து ஒருமுறை மட்டுமே வைரமுத்து கருத்து தெரிவித்தார். அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் வைரமுத்து பங்கேற்காமலே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினரும் விளக்கம் அளிக்காமலேயே இருந்து வந்தனர்.

  இந்த நிலையில் வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் ஆகியோர் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு திடீரென விளக்கம் அளித்துள்ளனர்.  மதன் கார்க்கி, ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய பாடலையே உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். அது தொடர்பான ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

  ‘‘உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.

  சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.’’

  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இன்னொரு மகனான கபிலன் வைரமுத்துவும், தந்தைக்கு ஆதரவாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

  ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.

  அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும் போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர்.

  படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்று விட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.

  அப்பாவும், அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின் விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர். தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.

  அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட வாழ்க்கை பெருமை வாய்ந்தது.

  தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சினையை பொழுதுபோக்காகச் சித்தரித்து பல பிரச்சினைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu

  கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாருக்கு பதிலளித்துள்ள அவரது மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
  சென்னை:

  இந்தியா முழுவதும் மீடூ இயக்கம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பணியிடங்களில் குறிப்பாக சினிமா துறையில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான தொல்லைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.  இந்த பதிவு சினிமா துறையையே உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என தெரிவித்துள்ளார்.

  மேலும், வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக வந்தால் எதிர்கொள்ள தயார் எனவும், வைரமுத்துவின் எழுத்துக்களை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது மற்றும் பாடம் நிறைந்தது என குறிப்பிட்டுள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
  பாலமுரளி பாலு இசையில், கபிலன் வைரமுத்து வரிகளில் கடந்த ஆண்டு சிம்பு ஒரு பாடலை பாடிய நிலையில், தற்போது டி.ராஜேந்தர் மது ஒழிப்பு பற்றி ஒரு பாடலை பாடியிருக்கிறார். #TRajender #KabilanVairamuthu
  தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்துகிறார்கள். 

  இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து மதுவுக்கு எதிராக ஒரு தனிப்பாடலை உருவாக்கி இருக்கிறார். பாலமுரளி இசையில் இந்த பாடலை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார். கடந்த வருடம் வெளியான `கவண்' திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து கூட்டணி இந்த தனிப்பாடலின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.  மது கலாசாரத்துக்கு எதிராக டி.ராஜேந்தர் பாடி உள்ள தனிப்பாடலின் தலைப்பு மற்றும் பாடல் வெளியாகும் தேதி போன்ற விவரங்களை கபிலன் குழுவினர் விரைவில் காணொலியாக வெளியிடுகிறார்கள். இந்த பாடலை காட்சிப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

  முன்னதாக கடந்த ஆண்டு பாலமுரளி பாலு இசையில், கபிலன் வைரமுத்து எழுதிய பண மதிப்பிழப்பு பாடலை நடிகர் சிம்பு பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #TRajender #KabilanVairamuthu #BalamuraliBalu

  மது கலாச்சாரத்திற்கு எதிராக உருவாக இருக்கும் கபிலன் வைரமுத்து வரிகளுக்கு டி.ராஜேந்தர் குரல் கொடுக்க இருக்கிறார். #TRajendar
  தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது. 

  இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள்.

  சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார். கடந்த ஆண்டு கபிலன் வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார்.   மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிட இருக்கிறார்கள். பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.
  சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Vairamuthu
  திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

  முன்னதாக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி மற்றும் ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

  கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர்.   மேலும் கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார். #Karunanidhi  #KarunanidhiFuneral #KalaignarAyya #Vairamuthu

  ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து அவரது குடும்பத்துடன்நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vairamuthu
  சென்னை:

  காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

  இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
  இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கிமற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar  #Vairamuthu

  ×