என் மலர்
சினிமா

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு வைரமுத்து குடும்பத்துடன் அஞ்சலி
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து அவரது குடும்பத்துடன்நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vairamuthu
சென்னை:
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கிமற்றும் அவர்களது குடும்பத்தினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vairamuthu
Next Story






