search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barathiraja"

    • அருள்நிதி தற்போது திருவின் குரல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது.

    வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.


    திருவின் குரல்

    திருவின் குரல்

    இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    திருவின் குரல்

    திருவின் குரல்


    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் எனவும் இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • லைகா புரொடக்ஷன்ஸ் தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.
    • இந்நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளார்.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது 'பொன்னியின் செல்வன் 2', 'இந்தியன் 2', 'லால் சலாம்' மற்றும் அஜித் 62 படத்தை தயாரித்து வருகிறது.


    திருவின் குரல்

    திருவின் குரல்

    இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிருவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 'திருவின் குரல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • கபிலன் வைரமுத்து எழுதிய "ஆகோள்" இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.
    • ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது.

    எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைர முத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920-ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது.

     

    பாரதிராஜா

    பாரதிராஜா

    ஆகோள் குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பட்டிருக்கிறேன். இந்த கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

    • இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
    • தற்போது இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

     

    பாரதிராஜா

    பாரதிராஜா

    சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நலம் விசாரித்து வந்தனர்.

     

    பாரதிராஜாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

    பாரதிராஜாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

    இந்நிலையில் சென்னையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் பாரதிராஜா.
    • இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

     

    பாரதிராஜா

    பாரதிராஜா

    இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


     


    பாரதிராஜா

    பாரதிராஜா

    சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


     


    பாரதிராஜா

    பாரதிராஜா

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    • இப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.

    தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

    சீனு ராமசாமி - பாரதிராஜா

    சீனு ராமசாமி - பாரதிராஜா

    தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். மாமனிதன் திரைப்படம் ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது

    சீனு ராமசாமி - பாரதிராஜா

    சீனு ராமசாமி - பாரதிராஜா

    இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, சீனு ராமசாமியை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். சீனு ராமசாமி என் மகன் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    ×