என் மலர்
நீங்கள் தேடியது "opanneerselvam"
- திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலையை மதுரை நிர்வாகிகள் அணிவித்தனர்.
- 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார்.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது பலத்தினை நிரூபிக்கின்ற வகையில் திருச்சி ஜி கார்னர் மைதா னத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ெஜயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. வின் 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார். மாநாடுபோல் நடந்த இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் திறந்த வாகனத்தில் வந்தார். அப்போது அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால் விழா ேமடைக்கு ஓ.பன்னீர் செல்வம் வர தாமதமானது.
அவர் மேடை ஏறியவுடன் மதுரை நிர்வாகிகள் இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ் மோகன், மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன், முருகேசன் ஆகியோர் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆட்டோ கருப் பையா, கண்ணன், கொம் பையா, கிரி, கருந்த பாண்டி, பாரப்பத்தி ஊராட்சி தலை வர் முத்தையா, கமலக் கண்ணன் ஓம் ஜெயபிரகாஷ், ரமேஷ், ஆட்டோ முத்துராம லிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அஜித்தின் தந்தை உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
- தற்போது இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

பாரதிராஜா
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நலம் விசாரித்து வந்தனர்.

பாரதிராஜாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் சென்னையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது.
- கடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து இரு தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த ஜூலை 20-ந் தேதி உத்தரவிட்டிருந்தார். இதை அடுத்து அ.தி.மு.க. அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களே பயன்படுத்தி வருகிறார்கள்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்ற போது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை 3 வார இடைவெளிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பண விவகாரங்களில் ஓ.பன்னீர் செல்வம் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது. என குறிப்பிட்டுள்ளார். நாளைய Case filed by OPS seeking handover of DMK office keys- Edappadi Palaniswami's reply in Supreme Courtவிசாரணையின்போது வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்து விட்டனர்.
- தீர்ப்புக்கு பின்னரே அடுத்தக் கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுக்க உள்ளதாக தகவல்
அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடக்கிறது.
கடந்த முறை மண்டப அரங்கில் கூட்டம் நடந்தது. ஆனால், இந்த முறை மண்டபத்துக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்தப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டுள்ளது. மேடையிலேயே 100 பேர் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
நேற்று வரை 2,455 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது பொதுக்குழு நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட இருக்கிறார். அதேபோல், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் இந்த கூட்டத்திலேயே வெளியாக இருக்கிறது.
ஒற்றை தலைமையை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரிய வரும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை 2-ம் கட்டமாக பிரசாரம் செய்தார். பொட்டலூரணி பகுதியில் அவர் பேசியதாவது: -
தமிழகத்தில் ஜெயலலிதாவின் பெயரை சொல்லிக் கொண்டு, போலியான ஆட்சி நடந்து வருகிறது. மக்களை பாதிக்கும் திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். அவர் இருந்திருந்தால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிர் இழந்திருக்க மாட்டார். மோடியை ஜெயலலிதா எதிர்த்தார். அதனால்தான் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, மோடி வந்து பார்க்கவில்லை.
ஜெயலலிதா கொலை செய்யப்பட்டு இருந்தால், நாட்டின் பிரதமருக்கு தெரியாமல் இருக்குமா? ஜெயலலிதா மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைக்கு இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இதனால்தான் அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம். மோடிக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்?. இவர்கள் அண்ணா படத்துக்கு பதிலாக, மோடி படத்தை வைத்தாலும் வைப்பார்கள். இதனை தடுக்கதான் நாங்கள் வந்துள்ளோம்.
அ.தி.மு.க. மூடப்பட இருக்கும் கம்பெனி. அந்த கம்பெனியில் தொண்டர்கள் இல்லை. அத்தனை தொண்டர்களும் எங்களிடம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், தற்போது தினகரன் கட்சி ஆரம்பித்து உள்ளார். அது தமிழகத்துக்கு பிடித்த பிணி என்று கூறி உள்ளார். நான் அ.தி.மு.க. துரோகிகளுக்குதான் பிணி. அவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு, ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்.
பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக கூறி ஏமாற்றினார். மேலும் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி விட்டு, தற்போது பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்து கொண்டார். வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதி கொடுத்து விட்டனர். பின்னர் எப்படி ஜெயலலிதா ஆட்சி என்று சொல்ல முடியும்?. அவர்களுக்கு அப்படி சொல்ல தகுதி இல்லை.
மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். அது யார் பணம் என்று உங்களுக்கு தெரியும். மக்களாகிய நீங்கள் துரோகிகளின் டெபாசிட்டை காலி செய்ய வேண்டும். துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது. வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும்.
நமது பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முறையான சாலை வசதி கிடையாது. பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி தரப்படும். இதுபோன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் செக்காரக்குடி, முடிவைத்தானேந்தல், சேர்வைக் காரன்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தான் ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி ஏழுபேர் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவை எடுக்கும் அதிகாரத்தை அளித்துள்ளது. எனவே நாங்கள் ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி வருகிறோம்.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அதிகாரம் படைத்த அமைப்பு. அவர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #opanneerselvam #neet

திண்டுக்கல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்துள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் மக்களின் ஆதரவை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எனவே மு.க. ஸ்டாலினின் முதல்- அமைச்சர் ஆகும் ஆசை பலிக்காது.
தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்துக்கு தீ வைத்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வன்முறை ஆட்சி செய்து மக்கள் மனதில் தீ வைத்தது தி.மு.க. தான். மேலும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, சாதி, மத கலவரம் ஆகியவை ஏற்பட காரணமும் தி.மு.க. தான்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.க. தான். அந்த தடையை தகர்த்தெறிந்து தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #opanneerselvam #mkstalin