கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், ஆனாலும் தாக்கம் குறையவில்லை - மதன் கார்க்கி

கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.கங்குவா படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், ஆனாலும் தாக்கம் குறையவில்லை - மதன் கார்க்கி
Published on

இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கங்குவா." ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முழுமை பெற்று அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், கங்குவா படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து படக்குழு மூலம் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி கங்குவா படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "கங்குவா திரைப்படத்தை முழுமையாக பார்த்தேன். டப்பிங் செய்யும் போது நூற்றுக்கும் அதிக முறை பார்த்த விட்டேன், இருந்தும் திரைப்படத்தின் தாக்கம் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிகரிக்கிறது. காட்சிகளில் பிரமாண்டம், மிக நுனுக்கமான கலை, ஆழமான கதை மற்றும் இசையின் அற்புதம் இவற்றுடன் சூர்யாவின் நடிப்பு, இதுவரை உருவாக்கியதில் மிக சிறப்பான படைப்பாக மாற்றுகிறது."

"இயக்குநர் சிறுத்தை சிவா உருவாக்கி இருக்கும் மிரட்டலான அனுபவத்திற்கு மனமார்ந்த நன்றிகள். இவரின் கனவுகளை நனவாக்கிய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com