என் மலர்
சினிமா

X
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி
By
மாலை மலர்9 Aug 2018 2:44 PM IST (Updated: 9 Aug 2018 2:44 PM IST)

சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே, கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha
திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர்.
இந்த நிலையில், மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இன்று காலை கவிஞர் வைரமுத்து அவரது மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha
Next Story
×
X