என் மலர்
சினிமா

சென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு
அமெரிக்காவில் சர்கா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #Vijay
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்று முதல் இன்று வரை பொதுமக்கள் பலரும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய், நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி#Karunanidhi#KarunanidhiMemorial#Vijay@actorvijaypic.twitter.com/2y3FX1hDOv
— Thanthi TV (@ThanthiTV) August 13, 2018
முன்னதாக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன், சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு, சூரி, விஷால், நந்தா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #Vijay
Next Story






