என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு வார விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கயத்தாறு சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு வார விழா
- சாலை பாதுகாப்பு வார விழாவிற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
- சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் ஒளிரும் கலர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
கயத்தாறு:
கயத்தாறு சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் சுங்கச்சாவடி புராஜக்ட் மேலாளர்கள் அம்பத்சிரிவாசகிரன்குமார், வேல்ராஜ், தென்மண்டல மேலாளர் அனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு சுங்கச்சாவடி மேலாளர் சிம்கரிசிவகுமார், வரவேற்று பேசினார். விழாவில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். சுங்கச்சாவடி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் ஒளிரும் கலர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுங்கச்சாவடி அலுவலர்கள் செய்திருந்தனர்.
Next Story






