சீரான குடிநீர் வழங்கக்கோரி பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன. கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்களை படத்தில் காணலாம்.
பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்களை படத்தில் காணலாம்.
Published on

கயத்தாறு :

கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் ராஜபதி, துறையூர், புங்களூர், ஆலடிப் பட்டி, அனைத்தலையூர், வடகரை, நேதாஜிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன.

இந்நிலையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விட்டு அனைதலையூர், மறக்குடி மற்றும் நேதாஜி நகரில் வாழும் கிராம மக்களுக்கு கூட்டுகுடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கங்கைகொண்டான்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் முன்பு பெண்களும், ஆண் களும் காலி குடங்களுடன் ஊர் நாட்டாண்மைகள் சின்னத்துரை, லெட்சு மணன், மகாராஜன் ஆகியோர் தலைமையில் முற்று கையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

கங்கை கொண்டான் போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர் கவிதா பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 2 நாட்களுக்குள் உடனடியாக புதிய பைப் லைன் வைத்து கொடுக்கப்படும் என்றனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

இதற்கிைடயே கங்கை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங் களான அலங்காரப்பேரி, மடத்துப்பட்டி, ராஜபதி, குப்பக்குறிச்சி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சீவலப்பேரியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தான் குடிதண்ணீர் வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்கும் போது அவர்கள் முறையாக பதில் கூறுவதில்லை. எனவே நிரந்தரமாக தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com