என் மலர்
நீங்கள் தேடியது "wild animals"
- 750 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது
- அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தரேஸ்வரன் கிராமம் ஆகும். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
பயிர்கள் சேதம்
மேலும் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குருமலை வனத்துறை பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மான்களும், பன்றிகளும் இப்பகுதியில் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து விடுவதாகவும், அவை பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
தினமும் 5 முதல் 10 ஏக்கர் வரை சேதம் செய்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதி விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டங்களுக்கு சென்று இரவு பகலாக விளக்குகளை வைத்துக்கொண்டு காவலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேதனை
இன்று காலை 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அவை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் தங்க நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.ஒரு ஏக்கருக்கு 30 குவிண்டால் மக்காச்சோளம் கிடைக்கும். அதற்கு விலையாக ரூ.60 ஆயிரம் பெறுவோம். ஆனால்
இந்த ஆண்டு அனைத்துமே பாழாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் இங்கு வந்து சேதங்களை கணக்கீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சோலார் வேலி அமைத்து போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.
- புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் சுற்றுலாவே பிரதான தொழிலாக உள்ளது. இதனை சுற்றி மேல்மலையில் மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கீழ்மலையில் பெருமாள்மலை, அடுக்கம், பேத்துப்பாறை, பண்ணை க்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. உருளைக்கிழங்கு, முட்டை க்கோஸ், கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறி கள் இங்கு விளைவிக்கப்படு கின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வனப்பகுதியில் காட்டெ ருமை, காட்டுப்பன்றி, யானை, மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி இடம்பெயரும் போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை தடுக்க முள் வேலி, சோலார் வேலி ஆகியவற்றை விவசாயிகள் அமைத்தனர். ஆனால் இந்த முயற்சி போதிய அளவு பயன் தரவில்லை. மீண்டும் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.
எனவே புதிய முயற்சியாக வயல் பகுதிகளையும், தோட்டங்களையும் பல வண்ண சேலைகளைக் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் வன விலங்குகள் ஆட்கள் நடமாட்டம் இருப்ப தாக எண்ணி வருவதில்லை என விவசாயிகள் தெரி விக்கின்றனர்.
இந்த பல வண்ண சேலை வேலிகள் மலைப்பகுதிகளில் டிரெண்டாகி வருகிறது. இதன் மூலம் வன விலங்குகள் வருவதை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
- வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல் வெளிகள் கருகி விட்டன.
ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்து விட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கூடலூர்-கக்கநல்லா சாலை, மசினகுடி-முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.
இவை உணவு தேடி சாலையோரங்களுக்கு வருகின்றன. குறிப்பாக யானை, மான்கள் கூட்டமாக வலம் வருகின்றன.
திடீரென சாலையை கடக்கின்றன. இதனால் வேகமாக வரும் வாகனங்களில் வனவிலங்குகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, செல்பி மோகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் விலங்குகளை கண்டவுடன் செல்பி எடுக்கின்றனர். இதனால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மனிதர்களை தாக்கும் அபாயமும் உள்ளது.
எனவே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கப்படுகிறது.
- திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்வதற்கு நாளை முதல் அனுமதி கிடையாது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி நாளை(புதன்கிழமை) முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்புடன் தொடங்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இதையடுத்து வருகிற 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அம்பை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சர கங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் சுற்றுலா தலங்களான மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, அகத்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.
இதேபோல் களக்காடு வனக்கோட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்தில் நம்பி கோவில் செல்வதற்கு நாளை முதல் 16-ந்தேதி வரை அனுமதி கிடையாது. அதேநேரத்தில் கோவில் விழா நடைபெறுவதால் பக்தர்கள் மட்டும் வருகிற 11-ந்தேதி(சனிக்கிழமை) மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குளம், குட்டைகளில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன.
- வனத் துறையினா் மானை மீட்டு அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.
அவினாசி :
அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.மேலும், இவை சாலைகளில் நடமாடும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன.
இந்நிலையில் அவிநாசி அருகே உள்ள அ.குரும்பபாளையம் பகுதியை சோ்ந்த பெரியசாமி என்பவரது தோட்டத்துக்குள் புள்ளிமான் நுழைந்தது. இதனைப் பாா்த்த நாய்கள் மானை துரத்தின. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நாய்களிடமிருந்து மானை காப்பாற்றி, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மானை மீட்டு அப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவித்தனா்.
தொடா்ந்து, விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிா்களைச் சேதப்படுத்தியும், வாகனம், நாய்களிடம் சிக்கி உயிரிழக்கும் வனவிலங்குகளை குடியிருப்புப் பகுதிகளில் நுழைய வண்ணம் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விவசாயிகள் மற்றும் மன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்திய மங்கலம் மற்றும் ஆசனூர் என 2 வனக்கோட்டங்கள் உள்ளன.
இந்த 2 வனக் கோட்டங்க ளில் சத்திய மங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம் , கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.
புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதி யில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக மழை பொய்யா ததால் தற்போது மரம், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளன.
மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள், தடுப்ப ணைகள், நீரோடைகள் மற்றும் பள்ளங்களில் தண்ணீர் வற்றியது.
இதன் காரணமாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு , மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்ப டுத்து வது தொடர்கதை ஆகியு ள்ளது.
கோடை காலங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்புவது வழக்கம்.
தற்போது வனப்ப குதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதால் வனவிலங்கு கள் வனப்பகு தியை விட்டு வெளியே வருவது அதிகரித்துள்ளது.
எனவே வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் மன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வனவி லங்குகள் வேட்டை யாடப்பட்டு வருவதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
- இருந்த காட்டு எருமைகள், கடமான், காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றின் எலும்புக்கூடுகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா பெரும்பள்ளம் வனச்சரகத்தைச் சேர்ந்த செம்பராங்குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வனவி லங்குகள் வேட்டை யாடப்பட்டு வருவதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் திலீப், உதவி வன பாதுகாவலர் சக்திவேல் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன், கொடைக்கா னல் வனச்சரகர் குமரேசன் தலை மையிலான வனத்து றையினர் தனியாருக்கு சொந்தமான தோட்டப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அந்த தோட்டத்தில் இருந்த பெண் தோட்ட காவலரிடம் விசாரணை செய்தனர். அப்பகுதியில் செல்லும் மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து அதில் வேலி அமைத்து வனவிலங்கு கள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து அங்கு புதைக்கப்பட்டு இருந்த காட்டு எருமைகள், கடமான், காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றின் எலும்புக்கூடுகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தோ ட்டத்தின் உரிமையாளரும் பழனி புது ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த வருமான அப்துல் ரசாக் என்ற சின்னத்தம்பி, அவரது தந்தை முகமதுஅப்பாஸ்ஒலி, தோட்டத் தொழிலாளி பாலமுருகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் நீண்ட நாட்களாக இதுபோன்ற வனவிலங்கு வேட்டை நடைபெற்று வந்துள்ளது. தொடர்ந்து தனியார் தோட்டத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்படும். குற்றவாளி களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு ள்ளது.
விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறினர். அரிய வகை விலங்குகள் வேட்டையாடப் பட்டுள்ளதால் இந்தக் கும்பலுக்கு பல ஆண்டுகளாக விலங்குகளை கொன்று உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையி னர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்துல்ரசாக் கொடைக்கானல் தி.மு.க. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் வேறு யாரேனும் வன விலங்கு வேட்டையில் தொடர்பில் உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வன விலங்குகள் மின் பாதையில் தொடாமல் இருப்பதற்கு தேவைப்படும் இடங்களில் மின்பாதையின் உயரத்தை அதிகரிப்பதற்கு கள ஆய்வு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடர்ந்து நடைபெற இருப்பதால் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது மற்றும் பொறுப்பு, கிராமப்புற கோட்டம்) வெங்கடேஷ்மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்னரசு, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், தென்காசி மற்றும் கடையநல்லூர் (பொறுப்பு) கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம், சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், மின் அளவி சோதனை பிரிவு செயற்பொறியாளர் ஷாஜஹான், மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவுகள் கையப்படுத்துதல் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி செயற்பொறியாளர்கள் சைலஜா, முத்துசாமி, சண்முகராஜ், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து மற்றும் மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நர்கள் கலந்து கொண்டனர்.
- 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.
- மின்கம்பங்களுக்கும் இடையே தூரத்தை குறைப்பதற்காக 28 மின் கம்பங்கள் நடப்பட்டது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்திற் குட்பட்ட தலையணை மலையடிவாரத்தில் மின் விபத்துகளில் இருந்து வனவிலங்குகளை பாது காக்கும் பொருட்டு, வனத்துறையினரும், மின்வாரிய ஊழியர்களும் இணைந்து மின் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக தலையணை வனப்பகுதி மற்றும் மலையடிவாரத்தில் தாழ்வழுத்த மின்பாதையில் பூமிக்கும் மின்பாதைக்கும் இடையில் உள்ள உயரத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே உள்ள 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.
இது போல 2 மின்கம்பங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை குறைப்பதற்கும் மொத்தம் 28 மின் கம்பங்கள் நடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது.
- ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன.
- காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள நிலங்களில் நிலக்கடலை, தென்னை, மா, மொச்சை உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்ற ன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள்,யானை,மான் கூட்டம் விளைநிலங்களில் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகிறது. நிலக்கடலை, பொச்சை பயிர்களில் செடிகளை முழுமையாக அழித்து பொருளாதார சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் கூட்டம் மழை நீர் ஓடைகளில் பதுங்கி இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
வல்லக்குண்டாபுரம், ஜல்லிக்கட்டு,கொங்கு ரார்குட்டை, பருத்தியூர், மானுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் சாகுபடியை கைவிடும் நிலைக்குகூட தள்ளப்பட்டுள்ளனர்.
காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன. பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் காட்டு பன்றிகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வேண்டும். அவற்றை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் போராட்டமும்நடந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வனவிலங்கு களால் சாகுபடி பாதிக்கும் போது நிவாரணம் வழங்க வனத்துறையினர் காலதாமதம் செய்கின்றனர். மேலும் பாதிப்புக்கும் வனத்துறை வழங்கும் நிவாரணத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே கிராம விவசாயிகளை உள்ளடக்கி மன உரிமை குழு கூட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு உடு–ம–லை–யை–ய–டுத்த பெரி–ய–கோட்டை, தாரா–பு–ரம் சாலை உள்–ளிட்ட பகு–தி–களில் நூற்–றுக்–க–ணக்–கான ஆடு–கள் மர்ம விலங்–கு–க–ளால் கடித்–துக் குத–றப்–பட்–டன.இதன் தொடர்ச்–சி–யாக கடந்த சில மாதங்–க–ளாக உடு–மலை, மடத்–துக்–கு–ளம் பகு–தி–களில் மீண்–டும் ஆடு–கள், கன்–று–கள் உள்–ளிட்–டவை கடித்து குதறி கொல்–லப்–பட்டு வரு–கின்–றன. இதனை தொடர்ச்–சி–யாக கண்–கா–ணித்து வரும் வனத்–து–றை–யி–னர், கால்–ந–டை–களை வேட்–டை–யா–டும் மர்ம விலங்–கு–கள் வன விலங்–கு–கள் இல்லை என்–பதை உறு–திப்–ப–டுத்–தி–யுள்–ள–னர். மடத்–துக்–கு–ளத்–தை–ய–டுத்த சாம–ரா–யப்–பட்டி உள்–ளிட்ட ஒரு–சில பகு–தி–களில் கூட்–ட–மாக வரும் நாய்–கள் மனி–தர்–க–ளின் கண் முன்னே ஆடு–களை வேட்–டை–யா–டி–யுள்–ளது. மேலும் அவை மனி–தர்–க–ளை–யும் கடிக்–கத் துரத்–தி–யுள்–ளது. இந்–த–நி–லை–யில் துங்–காவி அரு–கி–லுள்ள மலை–யாண்–டிப்–பட்–டி–னம் பகு–தி–யில் பொன்–னுச்–சாமி, ஈஸ்–வ–ர–சாமி ஆகிய விவ–சா–யி–க–ளின் தோட்–டத்–துக்–குள் நள்–ளி–ர–வில் நுழைந்த நாய்–கள் 2 ஆடு–களை கடித்–துக் கொன்–றுள்–ளன.தொடர்ச்–சி–யாக ரத்த வேட்–டை–யாடி வரும் நாய்–க–ளைப் பிடிக்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என்–பது விவ–சா–யி–க–ளின் கோரிக்–கை–யாக உள்–ளது.
- எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- ஆய்வு பணியில் மின் வாரிய அலுவலர்கள், வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சிங்கை:
நெல்லை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள பாபநாசம் கீழ் முகாம் பிரிவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் மின்வாரியம் மற்றும் வனத்துறை சார்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அலுவலர்கள் இணைந்து மின் பாதைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமியின் வழிகாட்டுதலின்படி மின்வாரிய செயற்பொறியாளர் சுடலையடும் பெருமாள் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பாபநாசம், சேர்வலார், காரையார் பகுதிகளில் வனவிலங்குகள் மின் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு பணியில் மின் வாரியம் சார்பில் அம்பை உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ், பாபநாசம் இளநிலை பொறியாளர் விஜயராஜ், விக்கிரமசிங்கபுரம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், முகவர் முருகன் மற்றும் வனத்துறை சார்பில் பாபநாசம் வன காப்பாளர் செல்வன், முண்டந்துறை வனவர் ராஜன், வன காப்பாளர் சமீர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை இடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகண்யா, தலைமை போலீஸ் ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் இடைக்கல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக 5 பேர் நாட்டுதுப்பாக்கியுடன் வந்தனர். அவர்களை பார்த்த போலீசார் உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர்கள் எறையூர் பகுதியை சேர்ந்த சூசை (வயது 45), தென்போஸ்கோ (23), அந்துவான் கிருஸ்துராஸ் (25), அந்துவான் சான்பீட்டர் (19), மற்றும் மே.மாலூர் பகுதியை சேர்ந்த ஜான் எடிசன் (22) ஆகியோர் என்பதும் இவர்கள் காப்பு காட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது. மேலும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.






