search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலையில் மின் பணிகள் ஆய்வு
    X

    மேற்கு தொடர்ச்சி மலையில் மின் பணிகள் ஆய்வு

    • எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வு பணியில் மின் வாரிய அலுவலர்கள், வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    சிங்கை:

    நெல்லை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள பாபநாசம் கீழ் முகாம் பிரிவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் மின்வாரியம் மற்றும் வனத்துறை சார்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அலுவலர்கள் இணைந்து மின் பாதைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமியின் வழிகாட்டுதலின்படி மின்வாரிய செயற்பொறியாளர் சுடலையடும் பெருமாள் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பாபநாசம், சேர்வலார், காரையார் பகுதிகளில் வனவிலங்குகள் மின் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு பணியில் மின் வாரியம் சார்பில் அம்பை உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ், பாபநாசம் இளநிலை பொறியாளர் விஜயராஜ், விக்கிரமசிங்கபுரம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், முகவர் முருகன் மற்றும் வனத்துறை சார்பில் பாபநாசம் வன காப்பாளர் செல்வன், முண்டந்துறை வனவர் ராஜன், வன காப்பாளர் சமீர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×