search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனவிலங்குகள் மின் பாதையை தொடாமல் இருப்பதற்கு  தேவைப்படும் இடங்களில் மின்பாதையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் -அதிகாரி அறிவுரை
    X

    ஆய்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    வனவிலங்குகள் மின் பாதையை தொடாமல் இருப்பதற்கு தேவைப்படும் இடங்களில் மின்பாதையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் -அதிகாரி அறிவுரை

    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகத்தில் இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வன விலங்குகள் மின் பாதையில் தொடாமல் இருப்பதற்கு தேவைப்படும் இடங்களில் மின்பாதையின் உயரத்தை அதிகரிப்பதற்கு கள ஆய்வு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடர்ந்து நடைபெற இருப்பதால் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

    கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது மற்றும் பொறுப்பு, கிராமப்புற கோட்டம்) வெங்கடேஷ்மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்னரசு, கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், தென்காசி மற்றும் கடையநல்லூர் (பொறுப்பு) கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம், சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், மின் அளவி சோதனை பிரிவு செயற்பொறியாளர் ஷாஜஹான், மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவுகள் கையப்படுத்துதல் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி செயற்பொறியாளர்கள் சைலஜா, முத்துசாமி, சண்முகராஜ், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து மற்றும் மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×