என் மலர்
நீங்கள் தேடியது "Agasthyar Falls"
- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்கப்படுகிறது.
- திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்வதற்கு நாளை முதல் அனுமதி கிடையாது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுக்கும் பணி நாளை(புதன்கிழமை) முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்புடன் தொடங்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இதையடுத்து வருகிற 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அம்பை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சர கங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் சுற்றுலா தலங்களான மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, அகத்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.
இதேபோல் களக்காடு வனக்கோட்டம் திருக்குறுங்குடி வனச்சரகத்தில் நம்பி கோவில் செல்வதற்கு நாளை முதல் 16-ந்தேதி வரை அனுமதி கிடையாது. அதேநேரத்தில் கோவில் விழா நடைபெறுவதால் பக்தர்கள் மட்டும் வருகிற 11-ந்தேதி(சனிக்கிழமை) மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






