search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் வன விலங்குகளை வேட்டையாடி உடல்  பாகங்கள் புதைப்பு தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேருக்கு வலை
    X

    கைப்பற்றப்பட்ட வனவிலங்குகளின் எலும்புகளை படத்தில் காணலாம்.

    கொடைக்கானலில் வன விலங்குகளை வேட்டையாடி உடல் பாகங்கள் புதைப்பு தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேருக்கு வலை

    • தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வனவி லங்குகள் வேட்டை யாடப்பட்டு வருவதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • இருந்த காட்டு எருமைகள், கடமான், காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றின் எலும்புக்கூடுகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் தாலுகா பெரும்பள்ளம் வனச்சரகத்தைச் சேர்ந்த செம்பராங்குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வனவி லங்குகள் வேட்டை யாடப்பட்டு வருவதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் திலீப், உதவி வன பாதுகாவலர் சக்திவேல் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன், கொடைக்கா னல் வனச்சரகர் குமரேசன் தலை மையிலான வனத்து றையினர் தனியாருக்கு சொந்தமான தோட்டப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த தோட்டத்தில் இருந்த பெண் தோட்ட காவலரிடம் விசாரணை செய்தனர். அப்பகுதியில் செல்லும் மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து அதில் வேலி அமைத்து வனவிலங்கு கள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து அங்கு புதைக்கப்பட்டு இருந்த காட்டு எருமைகள், கடமான், காட்டுப்பன்றி மற்றும் முள்ளம்பன்றி ஆகியவற்றின் எலும்புக்கூடுகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தோ ட்டத்தின் உரிமையாளரும் பழனி புது ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த வருமான அப்துல் ரசாக் என்ற சின்னத்தம்பி, அவரது தந்தை முகமதுஅப்பாஸ்ஒலி, தோட்டத் தொழிலாளி பாலமுருகன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் நீண்ட நாட்களாக இதுபோன்ற வனவிலங்கு வேட்டை நடைபெற்று வந்துள்ளது. தொடர்ந்து தனியார் தோட்டத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்படும். குற்றவாளி களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு ள்ளது.

    விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறினர். அரிய வகை விலங்குகள் வேட்டையாடப் பட்டுள்ளதால் இந்தக் கும்பலுக்கு பல ஆண்டுகளாக விலங்குகளை கொன்று உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையி னர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்துல்ரசாக் கொடைக்கானல் தி.மு.க. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் வேறு யாரேனும் வன விலங்கு வேட்டையில் தொடர்பில் உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×