சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், இனிப்புவகைகள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவிற்கு மாவட்டகலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரகவளர்ச்சித்துறை திட்டஅலுவலர்சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமகள் வரவேற்றார்.

அமைச்சர் பி.மூர்த்தி விழாவை தொடங்கி வைத்து 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், இனிப்புவகைகள், கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

இந்தவிழாவில் வட்டாட்சியர் வீரபத்திரன், செயல்அலுவலர் சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன், துணைத் தலைவர்கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அயூப்கான், ஒன்றியசெயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், கூட்டுறவு வங்கி இயக்குனர் பங்களா சி.மூர்த்தி, எல்.எஸ். அய்யாவு, ஜி.பி.பிரபு, அரவிந்தன் உட்பட பலர்கலந்துகொண்டனர்,

இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு 5வகையான உணவுவழங்கப்பட்டது. முடிவில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றிகூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com