சமுதாய வளைகாப்பு விழா

அலங்காநல்லூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ.வெங்கடேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சமுதாய வளைகாப்பு விழா
Published on

அலங்காநல்லூர்

அலங்காநல்லூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ.வெங்கடேசன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் உஷாராணி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பரந்தாமன், பொதுகுழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் பஞ்சுஅழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், விவசாய அணி நடராஜன், நகரசெயலாளர் ரகுபதி, யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, வட்டார மருத்துவர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் தவமணி, பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதீஸ்வரி, சேஷா ஜெயராமன், இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகை சாதங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com