என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
சமுதாய வளைகாப்பு விழா
- மனமகிழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
- கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்–துறை ஒருங்–கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேராவூரணி என்.அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக பேராவூரணி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நவீனாரெட்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணியும் விழா நடைபெற்றது. பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சவுந்தராஜன் பேசியதாவது:-
கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மனமகி ழச்சியுடன் இருந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றார். தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீது ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக சேதுபாவாசத்திரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசியா நன்றி கூறினார்.






