search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullock race"

    • காளையார் கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை காளையார் கோவில் புனித மைக்கேல் கல்லூரியின் நிறுவனர் மைக்கேல் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடை பெற்றது.

    இதில் பெரிய மாட்டு வண்டியில் 8 ஜோடிகள், சின்ன மாட்டு வண்டியில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டியினை புனித மைக்கேல் கல்வில்குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை தபிழ்நாடு பார்க்கவகுல சங்க மதுரை மாவட்ட தலைவர் கொடியேற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.20,000 மூன்றாம் பரிசு 15 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம் வழங்கப்பட்டது. நிகழ்சி பரிசுகளை ஆனந்தராஜ், கண்ணன், லூயிஸ் ராஜா, சபரிராஜன், துரைமுத்து, ராமன், மகேஸ்வரன் ஆகியோர் வழங்கி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஜான் சந்தியாகு, மோசஸ் ஏற்பாடு கள் செய்தனர்.

    • போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன், காந்தாரி அம்மன், முனியசாமி கோவில் ஆனிக்கொடை விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி. ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடங்களை பிடித்து வெற்றி பெற்றன.

    பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை, குத்துவிளக்கு மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மாட்டு வண்டி போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி கண்டு ரசித்தனர்.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழக்குடி கிராமத்தில் உள்ள தூய அமல உற்பவி அன்னை மாதா கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் தொடங்கியது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பந்தய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயமானது கீழ்க்குடி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது. இதில் 9 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 19 ஜோடி சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.

    கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கும், சாரதி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தினை பொதுமக்கள் ஏராள மானோர் கண்டு களித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலை மையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மனின் கோவில் 89 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்த யத்தில் நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

    நடு மாடுகளுக்கு சிவகங்கை சாலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்) அருகில் இருந்து தானிப்பட்டி வரையில் 7 மைல் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி களுக்கு க.பிள்ளையார்பட்டி விலக்கு வரை 5 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடந்தது.

    சீறி பாய்ந்து சென்ற காளைகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றன. அப்போது மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சாரதி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ரசிகர்களும், பொதுமக்களும் நின்று ஆரவாரத்துடன் போட்டி யை கண்டு ரசித்தனர்.

    நடுமாடு பிரிவில் இலங்கிப்பட்டி அர்ச்சுனன் முதலாவது பரிசும், தானிப்பட்டி ராமாயி 2-வது பரிசும், சிவகங்கை புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

    பூஞ்சிட்டு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன் முதல் பரிசும், கனகவள்ளி 2-வது பரிசும், பூண்டி கேசவன் 3-வது பரிசும் பெற்றனர். இதைத் தொடர்ந்து இன்று காலையில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி முதல் பரிசும், மாங்குளம் தேவேந்திரன் 2-வது பரிசும், சூரக்குண்டு இளவரசு 3-வது பரிசும் பெற்றனர். சிறிய மாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொ ண்டன. இதில் அவனி யாபுரம் மோகன்சாமி முதல் பரிசும், புதுப்பட்டி மணி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமை யாளர்களுக்கும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்களுக்கும் ரொக்க பரிசு, கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • பிள்ளையார்நத்தம் கிராமத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் 4-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
    • மாட்டுவண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வும், விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரனும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி, பேச்சியம்மாள் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் 4-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, சின்னமாடு என 3 பிாிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

    3 மைல் தூரம் கொண்ட தேன்சீட்டு மாட்டுவண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரனும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் முதல் பரிசு ரூ.8 ஆயிரத்தை பூசனூர்-எட்டையபுரம் மாட்டு வண்டியும், 2-வது பரிசு ரூ.6 ஆயிரத்தை கூத்தலூரணியை சேர்ந்த சுந்தரபாண்டி அய்யனார் மாட்டு வண்டியும், 3-வது பரிசு ரூ.4 ஆயிரத்தை பல்லாகுளம் பொன்முனியம்மாள் மாட்டு வண்டியும்,4-வது பரிசு ரூ.3 ஆயிரத்தை எப்போதும் வென்றானை சேர்ந்த தங்கமுத்துமாரி மாட்டு வண்டியும் பெற்றது.

    இதனைத்தொடர்ந்து நடு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.

    • மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர்-புளியம்பட்டி சாலையில் நடந்தது.
    • ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டி மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் கடம்பூர்-புளியம்பட்டி சாலையில் நடந்தது.

    போட்டிக்கு அயிர வன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரிய மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை அயிரவன் பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வேலன்குளம் கண்ணன் வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம் கமலா வண்டி 2-வது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

    சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்து கொண்டனர். சிறிய மாட்டு வண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை வி.எம்.சத்திரம் பாலன் வண்டி முதலிடத்தையும், சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி 2-வது இடத்தையும், சண்முகபுரம் விஜயகுமார் வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

    தொடர்ந்து குதிரை வண்டி போட்டியில் 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அவலாபேரி பாண்டி தேவர் குதிரை வண்டி முதலிடத்தையும், வள்ளியூர் ஆனந்த தேவர் வண்டி 2-வது இடத்தையும், நெல்லை டவுன் கோகுலம் குதிரை வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

    போட்டியை காண தூத்துக்குடி, நெல்லை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டி கண்ட தேவி ஊரணியை சுற்றி சுற்றுப்பந்தயமாக நடந்தது.

    இதில் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 38 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு ஊரணியை 7 சுற்றுகளும், சின்ன மாட்டு வண்டிக்கு 5 சுற்றுகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக மதுரை மாவட்டம் வெள்ளலூர் நாடு பர்மா காளி, 2-வதாக புதுக்கோட்டை மாவட்டம் பரளி கணேஷ், 3-வதாக சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம், 4-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்திகோட்டை கருப்பையா, 5-வதாக தினையாகுடி சிவா மாடுகள் வெற்றி பெற்றன.

    சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 22 ஜோடிகளை 2 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டது. முதல் சுற்றில் முதலாவதாக தேவகோட்டை குறிஞ்சி மளிகை ஸ்டோர், 2-வதாக தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், 3-வதாக மாத்தூர் குமார், 2-வது சுற்றில் முதலாவதாக துறை யனூர், 2-வதாக மேலூர் சூரக்குண்டு, 3-வதாக பீர்க்கலை காடு மாடுகள் வெற்றி பெற்றன.

    வெற்றிபெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு, மாலைகள் அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, மதுரை உள் ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி, சிவகங்கை, மதுரை உள் ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன.

    வைப்பார்-தூத்துக்குடி சாலையில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என்று மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வீர விளையாட்டு கழகச் செயலாளர் விஜயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னம்மாரி முத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரிய மாட்டு வண்டியில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 10 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மாட்டுவண்டி முதல் பரிசையும், 2-வது பரிசை அவானியாபுரம் மோகன்சாமி குமார், 3-வது பரிசை சண்முகாபுரம் விஜயகுமார் மாட்டு வண்டி தட்டி சென்றது.

    2-வது போட்டியாக சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஆறு கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில் ஜக்கம்மாள்புரம் பரமசிவம் என்பவரது மாட்டுவண்டி முதல் பரிசையும், சீவலப் பேரி பகுதியைச் சேர்ந்த துர்காம்பிகை என்பவரது மாட்டுவண்டி 2-வது பரிசையும், சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மெடிக்கல் 3-வது பரிசையும் தட்டிச் சென்றது.

    3-வது போட்டியாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் 31,ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இப்போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை நெடுகிலும் கைதட்டி மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது திடீரென கூட்டத்திற்குள் உள்ள புகுந்த மாட்டு வண்டி அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதி 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    • ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கொக்கன் கருப்பர் சுவாமி கோவில் ஆடிக்களரி திருவிழாவை முன்னிட்டு 26-ம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இந்த பந்தயத்தில் பெரியமாடு 8 மைல் தூரமும், சின்னமாடு 6 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டது. முதலில் 11 பெரியமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னாள் தடயவியல் துறை இயக்குநர் (ஓய்வு) விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி ஆகியோர் கொடி அசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல்பரிசாக பரவை அம்மாபொண்ணு கார்த்திகேயனுக்கு ரூ.15 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக சிங்கம்புணரி காஞ்சனாதேவிக்கு ரூ.14 ஆயிரத்து 26, 3-ம் பரிசாக பட்டிவீரன்பட்டி முரளிதரனுக்கு ரூ.13 ஆயிரத்து 26 ம், 4-ம் பரிசாக மட்டங்கிபட்டி காவியாவுக்கு ரூ.6 ஆயிரத்து 26ம் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசாக கல்லனை விஸ்வா ரவிச்சந்திரனுக்கு ரூ.14 ஆயிரத்து 26ம், 2-ம் பரிசாக மேலமடை சீமான் பாண்டியராஜனுக்கு ரூ.13 ஆயிரத்து 26-ம் , 3-ம் பரிசாக சிங்கம்புணரி செந்தில்குமாருக்கு ரூ.12 ஆயிரத்து 26ம், 4-ம் பரிசாக பாதரக்குடி வளர்மதிக்கு ரூ.5 ஆயிரத்து 26 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    போட்டியில் சீறிப்பாய்ந்த மாடுகள் இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன. இதில் வெற்றிபெற்ற முதல் 4 மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், பரிசுத்தொ கைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறியமாடுகள் 12 எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு த்தொகை வழங்கப்பட்டன. மாட்டுவண்டி பந்தயத்தை பொதுமக்கள் சாலை இருபுறமும் நின்று கண்டுகளித்தனர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் அம்பலகாரர் பார்த்தி பன், தனம் பிரிக்ஸ் சேவுகப்பெருமாள், சிங்கம்புணரி சேர்மன் அம்பலமுத்து, துணைச்சே ர்மன் இந்தியன் செந்தில் மற்றும் எட்டுக்கரை இளைஞர்கள் பங்காளிகள் செய்திருந்தனர்.

    ×