புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாள்: மாட்டு வண்டி பந்தயம்

காளையார் கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.
புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாள்:  மாட்டு வண்டி பந்தயம்
Published on

சிவகங்கை

சிவகங்கை காளையார் கோவில் புனித மைக்கேல் கல்லூரியின் நிறுவனர் மைக்கேல் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடை பெற்றது.

இதில் பெரிய மாட்டு வண்டியில் 8 ஜோடிகள், சின்ன மாட்டு வண்டியில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டியினை புனித மைக்கேல் கல்வில்குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை தபிழ்நாடு பார்க்கவகுல சங்க மதுரை மாவட்ட தலைவர் கொடியேற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.20,000 மூன்றாம் பரிசு 15 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம் வழங்கப்பட்டது. நிகழ்சி பரிசுகளை ஆனந்தராஜ், கண்ணன், லூயிஸ் ராஜா, சபரிராஜன், துரைமுத்து, ராமன், மகேஸ்வரன் ஆகியோர் வழங்கி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஜான் சந்தியாகு, மோசஸ் ஏற்பாடு கள் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com