search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KOVIL FESTIVAL"

    • போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன், காந்தாரி அம்மன், முனியசாமி கோவில் ஆனிக்கொடை விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி. ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    சிறியமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 37 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சிறீப்பாய்ந்து சென்றன. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடங்களை பிடித்து வெற்றி பெற்றன.

    பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை, குத்துவிளக்கு மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மாட்டு வண்டி போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி கண்டு ரசித்தனர்.

    • விளாத்திகுளம் நாகராஜா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    • போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் நாகராஜா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி விளாத்திகுளம் மதுரை நெடுஞ்சாலையில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட காளைகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தது.

    போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சிறிய மாட்டு வண்டியில் 26 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 10 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 2-வது போட்டியாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 45 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 6 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


    இப் போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
    • இந்த மோதல் காரணமாக போலீசார் 13 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள மம்மானியூரில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதேஊரை சேர்ந்த ராமன்(70) என்பவர் தனது பெயருக்கு ரசீது வாங்கி வைத்திருந்தார். இதனை ரத்து செய்ய வேண்டும் என முத்துப்பாண்டி தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று கொம்பேறிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் இதுதொட ர்பாக முத்துப்பாண்டி மற்றும் அவரது ஆதரவா ளர்கள் மனுகொடுக்க வந்தனர். அப்போது அங்கு வந்த ராமன் தரப்பினருக்கும், முத்துப்பாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ராமன், பிரபாகரன், முருகன் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே வடமதுரை போலீசில் புகார் அளித்த னர்.

    அதன்பேரில் முத்து ப்பாண்டி, சின்னத்துரை, சின்னச்சாமி, மூக்கையா, வெள்ளைச்சாமி, மணி உள்பட 13 பேர் மீது வட மதுரை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதில் வேண்டுதல் நிறைவேறிய 250 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மஞ்சள் ஆடை உடுத்தி, பய பக்தியுடன் கடந்த ஒரு வாரமாக விரதமிருந்து மருவத்தூர் அம்மன் குளத்தில் சக்தி அழைத்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடங்களை தலையில் சுமந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • முத்துமாரியம்மன்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட குறிச்சிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில், கடந்த 5ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், பால்குடம், அக்கினி காவடி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான நேற்று முன்தினம் திருத்தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து நேற்று பூமிதி விழாவும் நடைபெற்றது.

    பூமிதி விழாவில் கடந்த 15 தினங்களாக விரதமிருந்த பக்தர்கள் காவடி எடுத்து தீயில் இறங்கி நடந்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.இதில் ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

    • நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி தேரோட்டம் நடந்தது
    • பொதுமக்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 7 -ந் தேதி கருடசேவையும், 10 -ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.

    இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ேதர் முக்கிய வீதிகளான மாரியம்மன் கோவில், கடைவீதி, பஜனை மடம், ஆண்டார் மெயின் ரோடு, எம்.பி. எஸ்.அக்ரஹாரம் மற்றும் டவுன்ஹால் தெரு வழியாக உலா வந்து நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சென்ற வீதிகளில் பொதுமக்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். சிலர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    நீலமேகப்பெருமாள் திருக்கோவிலின் வைகாசி விசாக தேர் திருவிழாவை தொடங்கிய நாள் முதல் நாள் உற்சவம் முதல் பகலில் பல்லக்கிலும், இரவில் ஹம்ச, ஹனுமந்த, ஷேச, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் உற்சவ மூர்த்திகளின் வீதி உலா நடைபெற்றது.வீதி உலா முடிந்த பிறகு கண்ணாடி அறையில் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. அதுபோல தினந்தோறும் காலை , மாலை நேரங்களில் யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

    • திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே மணக்காட்டூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் இளைஞர்கள் கழுமரம் ஏறினார்கள்.
    • ஏற்பாடுகளை மணக்காட்டூர் ஊர்பொதுமக்கள், விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.


    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே மணக்காட்டூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் 25-ம் தேதி சுவாமி சிலை செய்ய பிடிமண் எடுத்துக் கொடுக்கப்பட்டது. 8-ம் தேதியன்று இரவு கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.


    இதனை தொடர்ந்து தோரணம் கட்டுதல் நடந்தது. பின்னர் தேவராட்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் முத்தாலம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் மின்ரதத்தில் அம்மன் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்தார்.

    அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், அக்கினிசட்டி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல், பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கழுமரத்தில் போட்டி போட்டு கொண்டு ஏறினர். இதில் பழனிபட்டியை சேர்ந்த சின்னக்கருப்பன் கழுமரம் ஏறி இலக்கை தொட்டார்.


    பின்னர் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கைகளோடு அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.




    ×