search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில்  கோவில் விழாவில் மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்
    X

    மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாயும் காளைகள்.


    விளாத்திகுளத்தில் கோவில் விழாவில் மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

    • விளாத்திகுளம் நாகராஜா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    • போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் நாகராஜா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி விளாத்திகுளம் மதுரை நெடுஞ்சாலையில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட காளைகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தது.

    போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சிறிய மாட்டு வண்டியில் 26 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 10 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 2-வது போட்டியாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 45 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 6 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


    இப் போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×