முத்துமாரியம்மன்கோவில் தீமிதி திருவிழா

முத்துமாரியம்மன்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.
முத்துமாரியம்மன்கோவில் தீமிதி திருவிழா
Published on

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட குறிச்சிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில், கடந்த 5ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், பால்குடம், அக்கினி காவடி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான நேற்று முன்தினம் திருத்தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து நேற்று பூமிதி விழாவும் நடைபெற்றது.

பூமிதி விழாவில் கடந்த 15 தினங்களாக விரதமிருந்த பக்தர்கள் காவடி எடுத்து தீயில் இறங்கி நடந்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.இதில் ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com