search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம்
    X

    பந்தயத்தில் பங்ேகற்ற மாட்டுவண்டிகள்.

    கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம்

    • தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டி கண்ட தேவி ஊரணியை சுற்றி சுற்றுப்பந்தயமாக நடந்தது.

    இதில் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 38 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு ஊரணியை 7 சுற்றுகளும், சின்ன மாட்டு வண்டிக்கு 5 சுற்றுகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக மதுரை மாவட்டம் வெள்ளலூர் நாடு பர்மா காளி, 2-வதாக புதுக்கோட்டை மாவட்டம் பரளி கணேஷ், 3-வதாக சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம், 4-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்திகோட்டை கருப்பையா, 5-வதாக தினையாகுடி சிவா மாடுகள் வெற்றி பெற்றன.

    சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 22 ஜோடிகளை 2 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டது. முதல் சுற்றில் முதலாவதாக தேவகோட்டை குறிஞ்சி மளிகை ஸ்டோர், 2-வதாக தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், 3-வதாக மாத்தூர் குமார், 2-வது சுற்றில் முதலாவதாக துறை யனூர், 2-வதாக மேலூர் சூரக்குண்டு, 3-வதாக பீர்க்கலை காடு மாடுகள் வெற்றி பெற்றன.

    வெற்றிபெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு, மாலைகள் அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    Next Story
    ×