search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saint Michael"

    • காளையார் கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை காளையார் கோவில் புனித மைக்கேல் கல்லூரியின் நிறுவனர் மைக்கேல் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடை பெற்றது.

    இதில் பெரிய மாட்டு வண்டியில் 8 ஜோடிகள், சின்ன மாட்டு வண்டியில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டியினை புனித மைக்கேல் கல்வில்குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை தபிழ்நாடு பார்க்கவகுல சங்க மதுரை மாவட்ட தலைவர் கொடியேற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.20,000 மூன்றாம் பரிசு 15 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம் வழங்கப்பட்டது. நிகழ்சி பரிசுகளை ஆனந்தராஜ், கண்ணன், லூயிஸ் ராஜா, சபரிராஜன், துரைமுத்து, ராமன், மகேஸ்வரன் ஆகியோர் வழங்கி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஜான் சந்தியாகு, மோசஸ் ஏற்பாடு கள் செய்தனர்.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 14-ந்தேதி ஆடம்பரத் தேர்ப்பவனி நடக்கிறது.

    ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனியும், 6.15 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருக் கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இரவு 9 மணிக்கு அன்பிய ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 10 மணிக்கு சிறப்பு ஜெப வழிபாடு நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் 8-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரையும் நடக்கிறது. விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை போன்றவை நடைபெறுகிறது.

    விழாவில் 12-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை திருப்பலி மறையுரை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 13-ந் தேதி காலை 10 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆடம்பரத் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 14-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலியும், காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 10 மணிக்கு திருப்பலியும், பகல் 12 மணிக்கு ஆடம்பரத் தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேர்த் திருப்பலியும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயம், உதவி பங்குத்தந்தையர்கள் வில்சன், சாலமன், பங்கு பேரவைத் துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் எம்.என்.ராஜபாலன், துணைச் செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோ சசி, பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவாடானை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது.
    • பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    திருவாடானை தாலுகா ஆண்டாவூரணியில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தினமும் நவநாள் திருப்பலியும், அருட் தந்தையர்களால் சிறப்பு மறையுறையும் நிகழ்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை அருட்தந்தை மரிய சிங்கராயர், ஆண்டாவூரணி பங்குத்தந்தை அந்தோணி மைக்கேல் ஆகியோர் தலைமையில் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் தூய மிக்கேல் அதிதூதர், புனித சந்தியாகப்பர், இன்னாசியார், புனித சவேரியார், புனித சூசையப்பர், அன்னை மரியாள் ஆகியோர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்து பொதுமக்களுக்கு இறை ஆசீர் வழங்கினர்.

    திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • ஒவ்வொரு நாளும் ஜெபமாலை நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறும்.
    • வருகிற 1-ந்தேதி கூட்டுத்திருப்பலி, மின்னொளி ரத தேர்பவனி நடைபெறுகிறது.

    நிலக்கோட்டை அருகே மிக்கேல்பாளையத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை செபாஸ்டின் அல்வராஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை சேவியர் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலையில் ஜெபமாலை நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு கூட்டுத்திருப்பலி, வாணவேடிக்கை, மின்னொளி ரத தேர்பவனி நடைபெறுகிறது. 2-ந்தேதி திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புனித மிக்கேல் ஆலய நிர்வாக குழுவினர், அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், பங்கு அமைப்புகள், பங்கு இறைமக்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 30-ந்தேதி புனித தேவசகாயம் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திக்கணங்கோடு அருகே உள்ள மணலிக்குழிவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.45 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடைபெறும். மாத்திரவிளை புனித ஆரோபன அன்னை ஆலய அருட்பணியாளர் ஜஸ்டின் பிரபு கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து திருப்பலி, அன்பிய ஒருங்கிணைய ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கூட்டுத்திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 9 மணிக்கு குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தும், திருமுழுக்கும் வழங்கப்படுகிறது. மாலையில் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி புனித தேவசகாயம் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளான வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்கு அழகியமண்டபம் அன்னை ஆதா பயிற்சி நிலைய இயக்குனர் அருட்பணியாளர் எஸ். கே .ஜோஸ் ராபின்சன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளர் மரிய வின்சென்ட் தலைமையில் பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஓலக்கோடு ஜான், செயலாளர் தீபா, துணை செயலாளர் மிக்கேல் ராஜ், பொருளாளர் விஜிலா, பங்கு அருள்பணி பேரவையினர், பங்கு இறைமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • 28-ந்தேதி இரவு மிக்கேல் அதிதூதர் தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.
    • 29-ம்தேதி காலையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் காலையில் திருப்பலியுடன் தொடங்கியது. மாலையில் ஜெபமாலையை தொடர்ந்து கொடியை அருட்தந்தை ஜெபநாதன் அர்சித்து ஏற்றி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி 9-ம் திருவிழாவன்று இரவு மிக்கேல் அதிதூதர் தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.

    10-ம் திருவிழா அன்று காலையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

    • 8-ம் திருவிழா அன்று நற்கருணை பவனி நடக்கிறது.
    • 10-ம் திருவிழா அன்று ஆடம்பர கூட்டுதிருப்பலி நடக்கிறது.

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.

    விழாவில் பங்கு தந்தைகள் இருதயசாமி, வினித், மார்ட்டின், சத்திஸ்டன், உதவி பங்குதந்தைகள் பாக்கியராஜ், வின்சென்ட், பால்ரோமன், சவரிராஜ் மற்றும் அகஸ்டின், மரியஅரசு, விக்டர் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நாட்களில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    விழாவில் 8-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் சூசை நசரேன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. 10-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுதிருப்பலி நடக்கிறது.

    • விழா வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் பிரார்த்தனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவிற்கு திண்டுக்கல் முதன்மை குரு சகாயராஜ் தலைமை தாங்கினார். அகரக்கட்டு பங்குத்தந்தை எட்வின்ராஜ், சுரண்டை பங்குதந்தை ஜோசப்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. விழா வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    தினமும் பிரார்த்தனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தையும், வட்டார அதிபருமான போஸ்கோ குணசீலன், உதவி பங்கு தந்தை அந்தோணி ராஜ் மற்றும் பங்கு பேரவையை சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள்.

    ×