search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராஜாவூர்புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    ராஜாவூர்புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 14-ந்தேதி ஆடம்பரத் தேர்ப்பவனி நடக்கிறது.

    ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனியும், 6.15 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருக் கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இரவு 9 மணிக்கு அன்பிய ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 10 மணிக்கு சிறப்பு ஜெப வழிபாடு நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் 8-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரையும் நடக்கிறது. விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை போன்றவை நடைபெறுகிறது.

    விழாவில் 12-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை திருப்பலி மறையுரை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 13-ந் தேதி காலை 10 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு ஆடம்பரத் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 14-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலியும், காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 10 மணிக்கு திருப்பலியும், பகல் 12 மணிக்கு ஆடம்பரத் தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேர்த் திருப்பலியும் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயம், உதவி பங்குத்தந்தையர்கள் வில்சன், சாலமன், பங்கு பேரவைத் துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் எம்.என்.ராஜபாலன், துணைச் செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோ சசி, பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×