என் மலர்
நீங்கள் தேடியது "மல்லிகார்ஜுனே கார்கே"
- இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை
- சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருகிறார்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தநிலையில், இன்று 9 மணிக்கு டெல்லியில் இருந்து மாஸ்கோ திரும்பினார். இதனிடையே இன்றிரவு 7 மணிக்கு புதினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாதநிலையில், எம்பி சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை காங்கிரஸ் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சொந்தக் கட்சியின் தலைவர்களே அழைக்கப்படாதபோது, தனக்கு வந்த அழைப்பை சசி தரூர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "அழைப்பு அனுப்பப்பட்டு, அழைப்பிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைவரின் மனசாட்சிக்கும் ஒரு குரல் உண்டு. நமது தலைவர்கள் அழைக்கப்படாதபோது, நாம் அழைக்கப்பட்டிருந்தால், விளையாட்டு ஏன் விளையாடப்படுகிறது, யார் விளையாடுகிறார்கள், நாம் ஏன் அதில் பங்கேற்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.
நேற்று, "இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.






