என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 21 வருவாய் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்
- புதிய பணியிடத்தில் சேர தவறினாலோ தமிழ்நாடு குடிமை பணிகள் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
நிர்வாக வசதிகளுக்காக வருவாய் ஆய்வாளர்கள் இடம் மாறுதல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், உள்வட்ட வருவாய் ஆய்வாளர் 21 பேரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டுள்ளார்.
நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் பணி நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும், மேல் முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இடம் மாறுதலை தவிர்ப்பதற்காக முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் விடுப்பில் சென்றாலோ அல்லது புதிய பணியிடத்தில் சேர தவறினாலோ தமிழ்நாடு குடிமை பணிகள் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள உள் வட்ட வருவாய் ஆய்வாளர்கள், புதிய பணியிடத்தில் இணையும் வகையில் அவர்களை உடனடியாக விடுவித்து, அவ்விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






