search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headmistress"

    • தலைமை ஆசிரியை சாந்தி ஸ்டேசனரி பொருட்கள் வாங்க கரூர் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
    • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் மெயின் வீதியை சேர்ந்தவர் சாந்தி (52). இவர் வடுகனூர் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள் வாங்கி வருவதற்காக கரூர் சென்று வருவதாக சம்பவத்தன்று கூறி சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.

    இதையடுத்து சாந்தியின் மகன் சூர்யா (26) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சாந்தியைத் தேடி வருகின்றனர்.

    • உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
    • 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்களின் விசாரணையைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பிறகு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அது ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி மாணவியின் தாயார் வக்கீல் உதவியுடன் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • விருதுநகர் மாவட்டத்தில் வழிப்பறி, நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மாத்திநாயக்கன்பட்டிரோடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் அய்யம்மாள் ராணி (வயது 51). இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கிக்கு அய்யம்மாள் ராணி வந்தார். அங்கு பணியை முடித்துவிட்டு சூலக்கரை ஐ.டி. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் பகுதி வந்தபோது மர்மநபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அய்யம்மாள் ராணி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    இந்த சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் வழிப்பறி, நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியை மீது மாணவிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து கல்வி அதிகாரி நேரடி விசாரணை நடத்தினார்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புவனேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவ-மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    மாணவர்களுக்கான இலவச திட்டங்களை செயல்படுத்துவதிலும் எஸ்.எஸ்.எஸ்., பசுமைப்பணி, என்.எஸ்.எஸ. போன்ற பணிகளுக்காக அரசு வழங்கும் நிதியை பற்றுச்சீட்டு எழுதி தான் செலவழித்துக் கொள்வதாகவும், மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.400 வரை கட்டாய வசூல் செய்வதாகவும், தெரிவித்தனர்.

    இது மட்டுமின்றி பள்ளி வகுப்பை முடித்து செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து பள்ளியில் நேரடி விசாரணை நடத்தினார். மாணவ-மாணவிகளிடமும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது மாணவிகள் தலைமை ஆசிரியர் மீது தாங்கள் அளித்த புகார் உண்மைதான் என்றும். இவர் ஏற்கனவே பணிபுரிந்த எரசை பள்ளியில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் அவரது பதவி காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனை அதிகாரிகள் ஏற்கக்கூடாது. அவர் மீதான புகாருக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிரேயரில் ‘கொட்டாவி’ விட்டதற்காக மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    குழந்தைகள் தங்களது பெற்றோர்களையும் தாண்டி அதிக நேரம் பள்ளி ஆசிரியர்களுடனே இருக்கிறார்கள். குழந்தைகள் அவர்களது குழந்தை தன்மையை இழந்தால் மட்டுமே பள்ளிகளில் படிக்க முடியும் என்கிற சூழ்நிலையை தற்போதைய தனியார் பள்ளிகள் உருவாக்கி விட்டன.

    அந்த நிலை தான் சரியானது எனும் மாய பிம்பைத்தை பெற்றோர்களிடமும் ஏற்படுத்திவிட்டன. குழந்தைகளை அவர்களின் இயல்பான குணங்களை விடுத்து, புத்தகம் கற்கும் கணினிகளாக பள்ளிகள் வளர்க்கின்றன. அதனை மீறும் குழந்தைகள் கடுமையாக தாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.

    அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் காலை பிரேயரின் போது 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கொட்டாவி விட்டதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவரை அடித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, ஆசிரியர்களை மதிக்காமல் செயல்பட்டால் தண்டனை அளிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை, நயாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த தலைமை ஆசிரியை மாணவர்களை மிரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தனது புகார் மனுவில் சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×