search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "road work"

  • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
  • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

  திருப்பூர்:

  திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

  சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

  ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

  இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

  இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

  இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

  • உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
  • உடன்குடி பேரூராட்சி துணைத்தலைர் சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

  உடன்குடி:

  உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் வடக்குத் தெரு, வில்லிகுடியிருப்பு விநாயகர் காலணி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவரும், நகர தி.மு.க. செயலருமான சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் உமா, மும்தாஜ்பேகம், பிரதீப் கண்னண், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், முன்னாள் நகர தி.மு.க. செயலர் கனகலிங்கம், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்டப் பிரதிநிதி ஹீபர் மோசஸ், தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், மனோ, கணேஷ், நாராயணன், தங்கம், திரவியம், உதயசூரியன், ஷேக் முகம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது
  • இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

  வேங்கிக்கால்:

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோடும் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

  இதில் முதல் கட்டமாக திருவூடல் தெரு சந்திப்பு முதல் காந்திசிலை வரை உள்ள ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

  இந்த சாலை பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்பவையிட்டு பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த பணிகள் இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனி ராஜூ, உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி மின் பொறியாளர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

  அடுத்த மாதம் நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிமெண்ட் சாலையில் நடைபெறும்.

  தேரோட்டத்திற்கு வசதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாடவீதிகளில் மின் கம்பங்களில் சென்று கொண்டிருந்த மின் வயர்கள் அனைத்தும் புதைவழி மின் தடமாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

  • வருசநாடு-வாலிப்பாறை சாலை கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.
  • வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  வருநாடு:

  வருசநாடு -வாலிப்பாறை இடையே சுமார் 5 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் அங்கு சாலை அமைக்க அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக சாலையை பராமரிக்காததால் சேதமடைந்துள்ளது.

  மேலும் நேற்று வருசநாடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. இதனால் ஆட்டோ க்களில் செல்லமுடியாத நிலையில் பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் பைக்கில் செல்பவ ர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

  எனவே மாவட்ட அதிகாரிகள் வனத்துறை யினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
  • கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலம்

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதிகள் இல்லை.

  சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்த மலை கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் மலை காடுகள் வழியாக நடந்து செல்கின்றனர்.

  மலையில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் யாராவது நோய்வாய்ப்ப ட்டால் அவர்களை டோலிக்கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.

  மேலும் மலையில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. படிப்புக்காக மாணவ மாணவிகள் தினமும் சென்றுவர 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

  மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  இந்த நிலையில் அடிவாரத்தில் இருந்து கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று காலை மலை கிராமத்திற்கு நடந்து சென்றார்.

  சாலை அமைக்கும் பணிக்காக கலெக்டர் வந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

  உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவி த்தனர். கலெக்டருடன் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவி கலெக்டர் பிரேமலதா, திட்ட இயக்குனர் செல்வகுரு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

  மலைக்கு சென்று வர என 16 கிலோ மீட்டர் தூரம் கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

  • கீழக்குயில்குடியில் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
  • ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

  திருப்பரங்குன்றம்

  திருப்பரங்குன்றத்தை அடுத்த கீழக்குயில்குடியில் ரூ.32 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விரைந்து செயல்படுத்த திருப்பரங்குன்றம் சட்டப்பே ரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குயில்குடி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்கள் சமணர் படுக்கை பகுதியில் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்ப டையில் கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.32 லட்சத்து 56 ஆயிரத்திற்கு பேவர்பிளாக் சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது.

  மேலும் அந்தப் பணிகள் நான்கு மாதங்களில் முடிக் கப்படும் என தெரிவிக்கப் பட்டது. ஆனால் தற்போது வரை அங்கு பேவர் பிளாக் சாலைப்பணிகள் எதுவும் தொடங்கவில்லை.

  எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடன டியாக பேவர் பிளார் சாலை அமைக்கும் பணி யினை செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றேன். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன்.

  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

  • சுமார் 10 வருடமாக தார் சாலை இல்லாமல் இருந்து வந்தது
  • வாகன ஓட்டிகள் சேறு சகதியில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

  புதுச்சேரி:

  ஊசுடு தொகுதி க்குட்பட்ட அரசூர் பகுதியில் உள்ள குமரன் நகர் மற்றும் முத்துக்குமரன் நகருக்கு சுமார் 10 வருடமாக தார் சாலை இல்லாமல் இருந்து வந்தது. மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சேறு சகதியில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

  இந்நிலையில் அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

  இந்நிலையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஆணை பெறப்பட்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் தியாகராஜன், பொதுச் செயலாளர் இளவரசன், கிளை தலைவர் அன்பு, கட்சி நிர்வாகிகள் உத்திரகுமார், செல்வம், அபிஷேக், தொகுதி பா.ஜனதா சாலை பொறு ப்பாளர் கருணாகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • பொதுமக்கள் வலியுறுத்தல்
  • தற்போது மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு சர்வீஸ் சாலை போடும்பணி நடைபெற்று வருகிறது.

  புதுச்சேரி:

  விழுப்புரம்- நாகப் பட்டினம் தேசிய நெடுஞ் சாலை பணி தற்போது நடை பெற்று வருகிறது. இதற்காக மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

  இந்த மேம்பாலத்தில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை போடப்பட்டு வரும் நிலையில் தற்போது மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு சர்வீஸ் சாலை போடும்பணி நடைபெற்று வருகிறது.

  இதனால் புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு வழியாக திருக்கனூர் செல்லும் அனைத்து வாக னங்களும் மேம்பாலத்தின் மேல் சென்று அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி வழியாக அனைத்து வாக னங்களும் திருப்பி விடப் பட்டுள்ளன.

  இதனால் 2 சக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் தொலை தூரம் சென்று வரவேண்டிய சூழல் உள்ளது.

  எனவே போர்க்கால அடிப்படையில் சர்வீஸ் சாலை பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரையில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
  • புதிய சாலை பணிகளை பூமி பூஜை செய்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

  விளாத்திகுளம்:

  விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரை யில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டிலும், புளிய ங்குளம் முதல் வேடபட்டி வரையில் ரூ.51.34 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய சாலை பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சீனிவாசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர் பாண்டியன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ், கிளைச் செயலாளர்கள் பொன்முருகன், பரமசிவம், முத்துகருப்பசாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், கிழக்கு ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், தி.மு.க. சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், மாணவர் அணி முனியசாமி, கிருஷ்ண குமார், கள உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஷேவக பெருமாள், கனகராஜா, முருகன், பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • நகர மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு
  • ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் நடைபெறுகிறது

  ஜோலார்பேட்டை:

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வார்டு பகுதிக்குட்பட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  நகராட்சிக்குட்பட்ட போலீஸ் நிலைய ரோடு சாலையானது நகராட்சியின் பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக இருந்து வருகிறது.

  நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகளின் இருபுறமும் கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று, அதன் பிறகு சாலை முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பும் பணி நடைபெற்று வந்தது.

  மேலும் அந்தப் பணியும் நிறைவுற்று நேற்று போலீஸ் நிலைய ரோடு சாலைக்கு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

  இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, பொறியாளர் பி. சங்கர், நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.