என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலைபணி"
- மேயர் மகேஷ் எச்சரிக்கை
- ரூ.4.25 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில், செப்.27-
நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டு சானல்கரை-சீயோன் தெருவில் ரூ.6 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். 31-வது வார்டு தளவாய்புரம் யூதாஸ்தெருவில் ரூ.4.25 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து 45-வது வார்டு பழவிளை தொழில்நுட்ப கல்லூரி அருகே நடந்த வரும் சாலை பணியையும், 47-வது வார்டு வல்லன் குமார விளையில் நடந்து வரும் சாலை பணிகளையும் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், சாலை பணிகளை தொடங்கும் போது சாலைகளை உடைத்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை விரைவில் செய்து முடிக்கவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணிகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகளிடமும், ஒப்பந்தகாரர்களிடமும் கூறினார்.
இதனால் சிறிது பரபரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, கவுன்சிலர்கள் அமலசெல்வன். தங்கராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அருள்செல்வின். பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புதிய சாலை அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது
- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக கோவிலுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது
திருச்சி,
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவிலில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள கண்ணனூரில அமைந்து உள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் செல்லும் பிரிவு ரோட்டில் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையிலும் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.மேலும் சமயபுரம் தேர்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் போது போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை போக்கும் வகையில்தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக சமயபுரம் மாரியம்மன் கோயில் செல்லும் வகையில் புதிய அணுகுமுறை சாலை அமைக்க இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தை இணைக்கும் வகையில் புதிய அணுகுமுறைச் சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்காக ரூ.23.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த புதிய சாலையானது பெருவளவாய்க்கால் கரையை ஒட்டி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வாய்க்காலின் இரு மருங்கிலும் 15 மீட்டர் அகலத்தில் நான்கு வழி சாலையாக இச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் கால்வாயின் பக்கவாட்டில் பாதுகாப்பிற்காக 300 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவரும் கட்டப்பட உள்ளது. வாய்க்காலின் இருமருங்கிலும் அமைக்கப்படும் இந்த புதிய சாலையில் ஒருபுறம் கோயிலுக்கு செல்லும் வாகனங்களும், மறுபுறம் கோயிலில் இருந்து செல்லும் வாகனங்களும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும்.இந்த 700 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய சாலையானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் கிளை சாலையாக இருக்கும். புதிய சாலையில் கார் மற்றும் பக்தர்கள் பேருந்துகள் அனுமதிக்கப்படும். இதனால் நேரடியாக பக்தர்களின் வாகனங்கள் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று விடலாம். இதனால் பக்தர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு உடனடியாக சமயபுரம் கோயிலுக்கு செல்லலாம்.இந்த புதிய சாலைக்கான பணிகள் 3 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.மேலும் சமயபுரத்தில் 2 திருமண மண்டபம், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ரூ.37,7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 500 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு மண்டபமும், 300 பேர் அமரக்கூடிய வகையில் மற்றொரு மண்டபமும் கட்டப்பட உள்ளது. இதேபோல சமயபுரம் கோயில் பஸ் ஸ்டாண்டு 600 வாகனங்கள் நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்படுத்தவும், கோயில் பூசாரிகள், பணியாளர்களுக்கான 30 குடியிருப்புகள் கட்டவும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
- கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.
- சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே பெருமுலை கிராமத்து செல்லும் சாலையோரம் சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர். பள்ளத்தில் ஏதும் ஜல்லி கொட்டி மூடாமல் பள்ளம் தோன்றிய நிலையில் அப்படியே உள்ளதால் அவ்வழியாக சிறுமுலை, பெருமுலை, புலிவலம், கீரனூர், வேப்பூர் வரை செல்லும் அனைத்து பஸ்களும் அவ்வழியே செல்கிறது.
மேலும் அன்றாட தேவைக்காக அருகிலுள்ள திட்டக்குடி நகரத்திற்கு சிறுகுறு விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் வருகை தருகின்றனர். இதில் சாலை ஓரம் பள்ளம் தோண்ட ப்பட்ட நிலையில் எந்த பாதுகாப்பும் வைக்காமல் தோண்டப்பட்ட நிலையில் கிடப்பதால் விபத்துக்கள் அன்றாடம் பள்ளத்தில் சக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக விழுந்து சிக்கிக்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் சாலைபணியை விரைந்து முடிக்கவும் சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்