என் மலர்

  நீங்கள் தேடியது "started"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இதற்கு ஏற்ப பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது.

  நீலகிரி

  கூடலூர் பகுதியில் பாகற்காய் சாகுபடி தொடங்கியது. பாகற்காய் விவசாயம் கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இடைவிடாமல் பெய்வது வழக்கம். இதைத்தொடர்ந்து மழைக்காலத்தில் விளையக்கூடிய இஞ்சி, ஏலக்காய், காபி மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

  தற்போது மழைக்காலம் முடிவடைந்து விட்டது. இதற்கு ஏற்ப பகலில் நன்கு வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் பயிரிட்டு இருந்த நெல் அறுவடை பணியும் நிறைவு பெற்றது. தொடர்ந்து வரும் மாதங்கள் கோடை காலம் என்பதால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய், அவரக்காய் உள்ளிட்ட கோடை கால பயிர்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதில் பாகற்காய் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு உள்ளது. 

  கேரளாவில் வரவேற்பு இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இந்த மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும். இதேபோல் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அடுத்தபடியாக சித்திரை விஷு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டும், கோடை வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பாகற்காய் பயிருக்கு கேரளாவில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பாகற்காய் பயிரிடப்படுகிறது. தொடர்ந்து பாகற்காய் அறுவடை செய்யப்பட்டு கேரளாவுக்கு தினமும் லாரிகளில் அதிகளவு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாகற்காய் உயர் ரக விதைகள் கிடைப்பது தாமதமாகி வருகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
  • மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கோவை:

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

  இந்நிலையில் இலுப்ப நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6-வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர்.

  இதனிடையே இப்பகுதியில் இருந்து சென்று வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், மனுவாக ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு வழங்கினர்.

  ஆனால் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய வசதி இல்லாததால் ஆட்டோவில் கூட செல்ல முடியாமல் நடந்தே செல்லும் நிலை உருவாகியது.

  எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

  இதுகுறித்து மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி அதன் எதிரொலியாக இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மூக்கனூர் வழியாக சென்ற அரசு பேருந்து அண்ணா நகர், வெங்கட்ராமபுரம் வழியாக எஸ்.புங்கம்பாளையம் அரசு பள்ளி வழியாக காலை 8 மணிக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோன்று மாலை 4 மணிக்கு இதே வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாளை விழிப்புணர்வு மையம் தொடங்குகிறது
  • தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையில் தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

  மதுரை,

  தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நாளை (12-ந் தேதி) மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட உள்ளது.

  மதுரை அரசு மருத்துவ மனை வளாகத்தில் மனநல நல்லாதரவு மன்றத்தை டீன் ரத்தினவேலு தொடங்கி வைக்கிறார்.

  இங்கு மருத்துவம், செவிலியர் மற்றும் மருத்து வம் சார்ந்த படிப்புக்கள் பயிலும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையில் தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

  ஒவ்வொரு துறையிலும் மனநல வழிகாட்டியாக ஒரு உதவி பேராசிரியரும், மனநல தூதுவராக 2 மாண வர்களும் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ மாணவர்களின் மனநல ஆலோசனைக்காக 24 மணி நேர தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட உள்ளது. இதில் துணை முதல்வர், மருத்துவக்கண்கா ணிப்பாளர், செவிலியர் கல்லுாரி முதல்வர், மனநல மருத்துவர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாண வர்கள் பங்கேற்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
  • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

  கடையம்:

  கடையம், அழகப்புரம், சம்பன்குளம் ஆகிய பகுதிகளில் ரூ.49.52 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

  கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

  விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி சந்திரபோஸ் , மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகாங்கீர், ரம்யா, சங்கர், மாரிக்குமார், தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் மற்றும் அவைத்தலைவர் பக்கீர் மைதீன், துணை செயலாளர் வின்சென்ட், ஜெயராணி அண்ணாத்துரை, சதாம் உசேன், சுரேஷ், மேசியாசிங், வினிங்ஸ்டன் , ஆதம்சுபர், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், அகமது ஈசாக், மாரியப்பன், சுப்பையா, முருகன், பகவதி, பஸ்ராஜ், பி.முருகன், சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
  • இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது.

  நெல்லை:

  நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

  அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு குலவணிகர்புரம் ெரயில்வே கேட் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தினமும் ரெயில்கள் செல்லும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

  அதனை தொடர்ந்து தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து நான்கு வழி சாலை வரையிலும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

  எனினும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான சாலைகளில் ஒன்றான எஸ்.என். ஹைரோடு சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

  இந்த சாலையில் பாதாள சாக்கடை மற்றும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடந்ததின் காரணமாக கடந்த 2 வருடங்களாக சாலை உருக்குலைந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

  மழை பெய்தால் வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழும் நிலையும், வெயில் அடித்தால் புழுதி பறப்பதுமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டு வந்தது.

  இதன் பயனாக நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் முதல் டவுன் ஆர்ச் வரையிலும் இந்த சாலையானது 12 மீட்டர் அகலத்தில் இருந்து 16 மீட்டர் அகலம் கொண்டதாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இன்று முதல் அந்த பணிகள் தொடங்கியது.

  மேலும் சாலையின் நடுவில் தடுப்பு கட்டப்பட்டு அதில் செடிகள் வைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

  இந்த பணிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  சுமார் 2 ஆண்டுகளாக வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், தற்போது சாலை சீரமைப்பு பணி தொடங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
  • ​எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

  ராமநாதபுரம் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று(1-ந் தேதி ) தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும்.

  ராமநாதபுரம் மாவ ட்டத்திற்குட்பட்ட 4 சட்ட மன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்கா ளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்தில் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களப்பணியின் போது, படிவம் 6டி-ஐ கொண்டுவரும் போது மேற்கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். ​எனவே, அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
  • கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார்.

  கடையநல்லூர்:

  தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை மற்றும் நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

  இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார். இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவசர முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டு நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் உபகரணங்களை இயக்கி பார்வையிட்டனர்.

  நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் அனிதா பாலீன், மருத்துவர்கள் சரவணக்குமார், மீனாட்சி, நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், கவுன்சிலர்கள் திவான் மைதீன், முகையதீன் கனி, தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அருணாசலபாண்டியன், பகவதியப்பன், நெசவாளர் அணி அமைப்பாளர் மூவன்னா மசூது மற்றும் நிர்வாகிகள் கருப்பணன், முதலியான்கான், வேல்சாமி, பேரூர் செயலாளர் வெள்ளத்துரை, கிளை செயலாளர்கள் பாலாஜி, கணேசன், முத்துராஜ், தங்கம், சுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் காளிமுத்து, அப்துல் மஜீத், அப்துல் வகாப், முகைதீன் அப்துல் காதர், சாகுல் ஹமீது, மசூது, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
  • செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

  புதுச்சேரி:

  புதுவை ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாட்கோ மூலமாக பாகூர் வார்க்கால் ஓடை கிராமத்தில் ரூ. 28 லட்சம் செலவில் தார் சாலை, இருளஞ்சந்தை பேட் சுடுகாட்டு சாலை ரூ. 7 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

  செந்தில்குமார்எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
  • கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

  ஈரோடு:

  ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.

  இந்நிலையில் ஆடி பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரிகள் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

  இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-

  ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.

  குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது. வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது.

  கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

  இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

  இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

  இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2ல் இருவர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–3 ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் இருவர், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர், மொடக்குறிச்சி யூனியன் 46புதூர் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் மூவர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்–2ல் மூவர் என, 7 பதவிக்கு அ.தி.மு.க, தி.மு.க. சுயேட்சை என 20 பேர் போட்டியில் உள்ளனர்.

  இந்த 7 பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சிங்கம்பேட்டை ஊராட்சி யில் ஒரு வாக்குச்சாவடி மையம், பெரிய புலியூரில் ஒரு வாக்குச்சாவடி மையம், தொப்பம்பாளையத்தில் ஒரு வாக்கு சாவடி மையம், கோட்டு புள்ளாபாளையத்தில் ஒரு வாக்குச்சாவடி மையம், 46 புதூரில் இரண்டு வாக்குச்சாவடி மையம், அத்தாணி பேரூராட்சியில் ஒரு வாக்கு சாவடி மையம், அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடி மையம் என 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

  ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர். காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

  பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து வாக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தார்கள். அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

  இதேபோல் வாக்குப்பதிவு நுழைவு வாயிலில் சானிடைசர்கள் கையில் தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

  வெயில் காரணமாக சாமியான பந்தலும் போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. பூத் சிலிப் வழங்கப்பட்டது. முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

  ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறையில் பொதுமக்கள் வாக்களித்தனர்.

  அத்தாணி, அம்மா–பேட்டை பேரூராட்சிகளில் மின்னணு வாக்கு பதிவு பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

  தேர்தலை ஒட்டி ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள 24 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வசதியாக இந்த பகுதியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், அரசு அரசு சார்ந்த நிறுவ–னங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo