வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

2 முறை இந்த கண க்கெடுப்பு பணி நடை பெறுகிறது.6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.
வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
Published on

டி.என்.பாளையம், 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்பாளையம் வன ப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இங்கு இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு மழைக்கு முந்தைய கண க்கெடுப்பு, மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு என 2 முறை இந்த கணக்கெடுப்பு பணி நடை பெறுகிறது.

இன்று முதல் நாளில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட பெரிய தாவர உண்ணிகளின் எச்சங்கள், கால் தடங்களும், 2-ம் நாளில் நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் என மாற்றி மாற்றி 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்க ர்பாளையம், விளா ங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com