என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urvasi Amirtharaj M.L.A"

    • இளம்பெண்ணும் அவரது உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர்
    • அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தனர்

    தூத்துக்குடி:

    சிவகளை அருகே உள்ள நயினார்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுடலைவடிவு என்ற தேவராஜ் (வயது 56). இவரது மனைவி சண்முகத்தாய் (52) கடந்த அக்டோபர் 30-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இவரது மறைவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி தேவராஜ் வீட்டில் சண்முகத்தாயின் இறப்பு விஷேச நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் பலர் வந்து கலந்து கொண்டனர். விஷேச நிகழ்ச்சி முடிந்த மறுநாள் தேவராஜ் மகள் சுடலைகனி மற்றும் கோகிலா என்ற சிறுமியும், உறவினர்களும் சிவகளை குளத்தில் குளிக்க சென்றனர். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுடலைகனி மற்றும் கோகிலா ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    நேற்று மதியம் சிவகளை வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நயினார்புரத்தில் உள்ள தேவராஜ் வீட்டிற்கு சென்று அங்கு சுடலைகனி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் சுடலைகனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதிபா மதிவாணன், கவுன்சிலர் பிச்சையா, விவசாய சங்கம் தலைவர் மதிவாணன், தி.மு.க. பெருங்குளம் நகர செயலாளர் நவநீதமுத்துக்குமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், முன்னாள் தலைவர் ஜெயசீலன்துரை, ஸ்ரீவை. வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து பிரதாபன், மாநில ஊடக பிரிவு தலைவர் முத்துமணி, ஸ்ரீவைகுண்டம் ஊடக பிரிவு மரியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை -செட்டிக்குளம் சாலை பணி அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம்  அருகே பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சுமார் 1 கி.மீ தூரமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் இதுகுறித்து முறையிட்டனர்.

    இதையடுத்து அவர் பரிந்துரையின்படி பன்னம்பாறை விலக்கில் இருந்து செட்டிக்குளம் இடையே சேதமான சுமார்  1400 மீட்டர் தொலைவில் சாலை அமைக்க ரூ.1கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடக்க விழா   நடைபெற்றது. சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் விக்ரமசிங் தலைமை தாங்கினார்.

    யூனியன் தலைவர்  ஜெயபதி, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்  பார்த்தசாரதி, பன்னம்பாறை ஊராட்சித் தலைவர்   அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை ஆய்வாளர் சுப்பிரமணியன்  வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  சங்கர், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன்,  நகர தலைவர் வேணுகோபால், வட்டார தலைவர்கள்  லூர்துமணி, சக்திவேல்முருகன், கோதாண்டராமன், நகர துணைத் தலைவர் கதிர்வேல், நகர மகிளா காங்கிரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை ஆய்வாளர் முருகன் நன்றி கூறினார்.

    ×